தோனி -ல இல்லை ; இவரிடம் இருந்து தான் கேப்டன்ஷி எப்படி செய்யவேண்டுமென்று கற்றுக்கொண்டேன் ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நேற்று தான் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. அதில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளனர்.

ஹர்டிக் பாண்டியாவின் கேப்டன்ஷி :

சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் ஹர்டிக் பாண்டியாவின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. அதனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் சர்மாவை கேப்டனாகவும், டி-20 போட்டிகளில் ஹர்டிக் பாண்டியாவை கேப்டனாகவும் அறிவிக்க போவதாக பிசிசிஐ முடிவு எடுக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு சர்வதேச டி-20 போட்டிக்கான தொடரின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய தான் நியமனம் செய்யப்பட்டு வருகிறார். அதிலும் நேற்று முன்தினம் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் தொடரில் வென்றுள்ளனர்.

இந்திய அணியின் டி-20 போட்டிக்கான கேப்டனாக அறிவிப்பதற்கு முக்கியமான காரணம் ஐபிஎல் தொடர் தான். ஆமாம் ஐபிஎல் 2022 குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்த ஹார்டிக் பாண்டிய அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்ல முக்கியமான காரணமாக திகழ்ந்துள்ளார். அதுமட்டுமின்றி, ஹர்டிக் பாண்டியாவின் அணுகுமுறை இந்திய அணிக்கு வெற்றியை கைப்பற்றி கொடுத்துள்ளது.

மேலும் கேப்டன் பற்றி பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் : “நான் அண்டர் 16 விளையாடி கொண்டு இருந்த நேரத்தில் நான் பரோடா அணியை வழிநடத்தினேன். அதன்பின்னர் நான் போட்டியில் கவனம் செலுத்த வேண்டுமென்று அனைவரும் நினைத்தனர். அதில் இருந்து என்னால் எந்த அணியையும் வழிநடத்த முடியவில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் அது கிடைத்தது. அதற்கு மிகவும் முக்கியமான ஒன்று பயிற்சியாளர் தான்.”

“ஆமாம் , ஆசிஷ் நெஹ்ரா தான் என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்தார். நாங்க இரு நபர்களாக இருக்கலாம், ஆனால் ஒரு மாதிரி தான் யோசனை செய்வோம். அவர் இருப்பதால் கேப்டன்ஷி சுலபமாக செய்ய முடிந்தது என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.”

வருகின்ற 2024ஆம் ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்டிக் பாண்டிய இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

ரோஹித் சர்மாவை விட டி-20 போட்டிகளில் ஹர்டிக் பாண்டிய சிறப்பாக கேப்டன் செய்து வருகிறாரா ? உங்கள் கருத்து என்ன ? மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here