இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி ஒருவழியாக நேற்று முன்தினம் முதல் சிறப்பாக முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்ததால் தொடரை வென்றுள்ளனர்.
மூன்றாவது டி-20 போட்டியில் நடந்த சிறப்பான சம்பவம் :
டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியிக்கு அதிசயமாக சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. அதில் இஷான் கிஷான் 1 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், சுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபதி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.
அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 229 ரன்களை அடிக்க முடிந்தது. பின்பு 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. ஆமாம், தொடக்கத்தில் இருந்து மோசமான நிலையில் விளையாடிய இலங்கை அணியால் 137 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது.
அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று 2 – 1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது இந்திய.
சூர்யகுமார் யாதவின் சிறப்பான தரமான சம்பவம் :
மூன்றாவது டி-20 போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் விளையாடிய அதிரடியான ஆட்டத்தால் இலங்கை அணி அதிர்ச்சியில் மூழ்கினார்கள். எப்படி பந்து வீசினாலும் பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்து கொண்டு வந்தார் சூரியகுமார் யாதவ்.
அதிரடியாகவும் சிறப்பாகவும் விளையாடிய சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 51 பந்தில் 112 ரன்களை விளாசினார். அதில் 9 சிக்ஸர் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். அதுமட்டுமின்றி இப்பொழுது இருக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, கிரிக்கெட் ரசிகர்களும் சூர்யகுமார் யாதவின் அதிரடியான ஆட்டத்தை கண்டு மகிழ்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, போட்டி முடிந்த பிறகு சூர்யா..! சூர்யா..! என்று சத்தம் போட்டு கொண்டு கொண்டாடிய வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
சூரியகுமார் யாதவின் பங்களிப்பு இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்ற ? இல்லையா ?