இனிமேல் கே.எல்.ராகுலுக்கு பதிலாக இவர் தான் தொடக்க வீரர் ; இனிமேல் இந்திய அணிக்கு பிரச்சனையே இல்லை ; ரசிகர்கள் வரவேற்பு ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிக்கான தொடர் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய கிரிக்கெட் அணி தான் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை வென்றுள்ளனர்.

இந்திய அணியின் நீண்ட நாட்களாக தொடரும் பிரச்சனை :

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் ஒரே பிரச்சனை தொடக்க வீரர்கள் தான். ஆமாம், இதுவரை விளையாடிய வீரர்கள் யாரும் தொடர்ச்சியாக ரன்களை அடிப்பதே கிடையாது. அவ்வப்போது தொடக்க வீரர்களை மாற்றம் செய்து கொண்டே வருகிறது இந்திய கிரிக்கெட் அணி.

கடந்த 10 சர்வதேச டி-20 போட்டிகளில் ரோஹித் சர்மா, இஷான் கிஷான், கே.எல்.ராகுல், ஷிகர் தவான், சுப்மன் கில், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், தீபக் ஹூடா வீரர்கள் அணியின் தொடக்க வீரர்களாக விளையாடி வந்துள்ளனர்.

இதில் இஷான் கிஷான் -க்கு தான் ரோஹித் சர்மா முன்னுரிமை கொடுத்தார். ஆனால் முக்கியமான இடங்களில் பெரிய அளவில் ரன்களை அடிக்காமல் விக்கெட்டை இழந்த காரணாத்தால் கே.எல்.ராகுலை தொடக்க வீரராக விளையாட வைத்தது இந்திய. ஆனால் அதில் ஒரு பலனும் கிடையாது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை மற்றும் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுலின் பங்களிப்பு மோசமான நிலையில் இருந்தது. ஒருசிலர் தொடக்க ஆட்டம் சரியாக இல்லாதது தான் இந்திய அணி வெளியேறியதற்கு முக்கியமான காரணம் என்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வரும் இந்திய அணி. மீண்டும் இஷான் கிஷனை தொடக்க வீரராக விளையாட வைத்து வருகின்றனர். வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திய இஷான் கிஷான் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 210 ரன்களை விளாசினார் இஷான் கிஷான்.

அதுமட்டுமின்றி, சமீப காலமாகவே கே.எல்.ராகுலின் பங்களிப்பு பெரிய அளவில் இல்லை என்பது தான் உண்மை. வாய்ப்பு கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் விளையாடி வருகிறார். அதனால் இனிவரும் போட்டிகளில் இஷான் கிஷான் தான் ரோஹித் சர்மாவுடம் தொடக்க வீரராக களமிறங்கி விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.