இவரால் தான் இந்திய அணி 350 ரன்களை அடிக்க முடிந்தது ; அவருடைய விளையாட்டு இப்படி தான் இருக்கும் ; ஹனுமா விஹாரி ஓபன் டாக்

நேற்று காலை 9:30 மணியளவில் தொடங்கிய இந்திய மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் நாள் நிறைவடைந்துள்ளது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். இதனை பற்றிய பேசிய ரோஹித் சர்மா, முதலில் அதிக ரன்களை அடித்து டார்கெட் வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் முடிவில் அதிரடியாக விளையாடி 6 விக்கெட்டை இழந்து 357 ரன்களை அடித்துள்ளனர். அதுமட்டுமின்றி, இப்பொழுது ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற இருவரும் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இன்னும் நான்கு விக்கெட் மீதமுள்ள நிலையில் இந்திய அணி 450 ரன்களை அடிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ரோஹித் சர்மா மயங்க் அகர்வால் 33, ரோஹித் சர்மா 29, ஹனுமா விஹாரி 58, ரிஷாப் பண்ட் 96, விராட்கோலி 45, ஷ்ரேயாஸ் ஐயர் 27, ரவீந்திர ஜடேஜா 45 மற்றும் ரவிச்சந்திரன் 10 ரன்களை அடித்துள்ளனர்.

இந்திய அணியால் இவ்வளவு ரன்களை அடிக்க முக்கியமான காரணமாக இருந்தது இவர் தான் என்று ஹனுமா விஹாரி கூறியுள்ளார். இதனை பற்றிய பேசிய அவர் ” எனக்கு தெரிந்து இந்திய அணியின் மிடில் மிகவும் வலுவாக தான் உள்ளது. நானும் நன்றாக தான் விளையாடியுள்ளேன்”.

“அதுவும் இந்திய அணியில் மூன்றாவதாக பேட்டிங் செய்வது மிகவும் பெருமையாக உள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய அணியில் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய சொன்னாலும் அதனை செய்ய ஆர்வமாக உள்ளேன். தொடக்கத்தில் பந்தை பார்த்து விளையாட சுயமாக தான் இருந்தது, ஆனால் போக போக கடினமாக மாறியது”.

ரிஷாப் பண்ட் ஒரு வித்தியாசமான பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. ஆமாம், ஏனென்றால் அவர் எப்பொழுது அவரது விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே விளையாடுவார். இன்றைய போட்டி அவருக்கு முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. அவர் எப்படி பேட்டிங் செய்வார் என்று எங்களுக்கு நன்கு தெரியும்”.

“அதுவும் அவர் அடித்த ரன்களால் தான் இந்திய அணி 350+ மேற்பட்ட ரன்களை அடிக்க முடிந்தது. அதனால் இந்திய அணிக்கு மிகவும் சாதகமாக மாறியுள்ளது போட்டி என்று கூறியுள்ளார் இந்திய வீரர் ஹனுமா விஹாரி. ரிஷாப் பண்ட் முதல் இன்னிங்ஸ் -ல் விளையாடி 97 பந்தில் 96 ரன்களை அடித்துள்ளார். அதில் 4 சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரி அதில் அடங்கும்.