கேப்டனாக மாறிய தோனி, தோனி எடுத்த இந்த முடிவால் தான் சென்னை அணிக்கு தோல்வியா ? முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல் 2022 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றனர். ஆமாம், நேற்று நடந்த 7வது போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

அதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி டாஸ் வென்று முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன் படி முதலில் களமிறங்கிய சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 210 ரன்களை அடித்து விளாசியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

அதிலும் ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்களில் ஆட்டம் இழந்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் பின்னர் பேட்டிங் செய்த வீரர்கள் ரன்களை அடித்து தொம்சம் செய்தனர். அதில் ருதுராஜ் 1, உத்தப்பா 50, மொயின் அலி 35, ஷிவம் துபே 49, ராயுடு 27, ரவீந்திர ஜடேஜா 17, தோனி 16, ப்ராவோ 1 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 211 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணி. சிறப்பாக தொடக்கத்தில் இருந்து விளையாடிய காரணத்தால் 19.3 ஓவர் முடிவில் 211 ரன்களை அடித்து சென்னை அணியை 6 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

சென்னை அணிக்கு என்ன தான் காரணம் ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பக்கவாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பவுலிங் சிறப்பாக உள்ளதா என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஏனென்றால் சென்னை அணி விளையாட முதல் போட்டியிலும், நேற்று விளையாடிய இரண்டாவது போட்டிகளிலும் பெரிய அளவில் பவுலிங் இல்லை.

நேற்று நடந்த லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி மொத்தம் 7 பவுலர்களை பயன்படுத்தியது தான் உண்மை. ஆமாம், நேற்று விளையாடிய மைதானத்தில் பெரிய அளவில் சுழல் பந்து வீச்சு எடுபடாத காரணத்தால் ஜடேஜா மற்றும் மொயின் அலி இருவரும் இரு சில ஓவர் மட்டுமே பவுலிங் செய்து வந்தனர்.

இறுதியாக சென்னை அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருந்தது. இருப்பினும் தோனி அந்த நேரத்தில் பீல்டிங் செட் செய்தார், அதுமட்டுமின்றி அந்த நேரத்தில் ஜடேஜா பவுண்டரி லைன் பக்கத்தில் பீல்டிங் செய்து வந்தார். 19வது ஓவர் பவுலிங் செய்வதற்கு முன்பு ஷிவம் துபே தோனியிடம் ஆலோசனையில் ஈடுபட்டார்.

அதுமட்டுமின்றி 19வது ஓவரில் ஷிவம் துபே பவுலிங் செய்ய சொன்னது தோனி தான் என்று தகவல் வெளியானது. எப்பொழுதும் சரியான முடிவுகளை கையில் எடுக்கும் தோனி, இந்த முறை தவறிவிட்டதா என்று கேள்விகள் எழுந்தன. சென்னை அணியின் தோல்விக்கு முதல் காரணம் 19வது ஓவர் தான். ஏனென்றால் அந்த ஓவரில் மட்டும் 25 ரன்களை கொடுத்துள்ளார் ஷிவம்.

ஒருவேளை அந்த ஓவரில் ரன்களை கட்டுப்படுத்திருந்தால் நிச்சியமாக சென்னை அணிக்கு வெற்றி கிடைக்க அதிக வாய்ப்புகள் இருந்திருக்கலாம். கிரிக்கெட் ரசிகர்களே, நீங்க சொல்லுங்க சென்னை அணியின் தோல்விக்கு முக்கியமான காரணம் என்ன ? COMMENTS பண்ணுங்க..!

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here