இந்திய அணியில் இவர் இல்லாத காரணத்தால் தான் கடந்த இரு முறையும் உலகக்கோப்பை வெல்ல முடியாமல் போனது ; முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி, கடந்த இரு முறை நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி மோசமான நிலைக்கு தள்ளப்படத்திற்கு முக்கியமான காரணமாக ஆல் – ரவுண்டரை சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்பொழுது இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான ஒருநாள் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து ஐந்து டி-20 போட்டிகளில் விளையாட உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியில் பல மாற்றங்களுடன் ஒவ்வொரு போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். ஏனென்றால், இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் அதற்கு தயாராகி வருகின்றனர்.

ஐசிசி உலகக்கோப்பை 2021:

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தினர். அதில் இந்திய கிரிக்கெட் அணி மிகவும் மோசமான நிலையில் விளையாடினார்கள் என்பது தான் உண்மை.

தொடர்ந்து போட்டிகளில் மோசமான தோல்வியை கைப்பற்றிய நிலையில் அரைஇறுதிக்கு கூட தகுதி பெறாமல் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது இந்திய. அதனால் இந்த ஆண்டு எப்படியாவது ஐசிசி கோப்பையை வெல்ல வேண்டுமென்று இந்திய அணியை சிறப்பாக தயாராகி வருகின்றனர்.

ரவி சாஸ்திரி:

உலககோப்பை போட்டிகளை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவி சாஸ்திரி சமீபத்தில் அளித்த பேட்டியில் ; “கடந்த இரு முறை இந்திய அணி உலகக்கோப்பை போட்டிகளில் சரியாக விளையாடவில்லை. அதற்கு முக்கியமான காரணம் ஹர்டிக் பாண்டிய தான். ஏனென்றால், இந்திய அணியின் அவரது பவுலிங் மற்றும் பேட்டிங் மிகவும் முக்கியமான ஒன்று.”

“பின்பு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதனால் ஹர்டிக் பாண்டிய போன்ற ஒரு வீரர் நிச்சியமாக இந்திய அணியில் இருக்க வேண்டுமென்று நான் கூறினேன், ஆனால் அதற்கு யாரும் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் இந்த முறை அவரது விளையாட்டு மிகவும் ஆற்புதமாக மாறியுள்ளது.”

“அதனால் இனிவரும் போட்டிகளில் அவரது ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரவி சாஸ்திரி.” கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளுக்கு பிறகு ஓய்வு எடுத்த ஹர்டிக் பாண்டிய சுமார் 5 மாதங்கள் எந்தவிதமான போட்டிகளிலும் விளையாட நிலையில் ஐபிஎல் டி-20 சிறப்பாக கம்பேக் கொடுத்தார்.