இந்திய கிரிக்கெட் அணி :
சமீபத்தில் தான் இந்திய மற்றும் தென்னப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் இரு அணிகளும் தலா இரு போட்டிகளில் வென்றுள்ளனர். இறுதி போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் போட்டிகள் சம நிலையில் முடிந்துள்ளது.
அதனை தொடர்ந்து இப்பொழுது இந்திய வீரர்கள் இங்கிலாந்து அணியை எதிர்த்து ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளனர். பயிற்சி ஆட்டம் வருகின்ற ஜூன் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், டெஸ்ட் போட்டி ஜூலை 1 முதல் ஜூலை 5வரை விளையாட உள்ளனர்.
அதனால் இந்திய மற்றும் இங்கிலாந்து வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய :
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக உள்ளார், ஹர்டிக் பாண்டிய. கடந்த ஆண்டு அவரது ஆட்டம் சொல்லும் அளவிற்கு இல்லை. அதற்கு முக்கியமான காரணம் அறுவை சிகிச்சை தான். சிகிச்சைக்கு பிறகு மிகவும் மோசமான நிலையில் தான் விளையாடி வந்துள்ளார்.
அதனால் கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நான் சரியாக பவுலிங் செய்யும் வரை என்னை அணியில் எடுக்க வேண்டாம் என்று ஹர்டிக் பாண்டிய முடிவு செய்தார். அதனை தொடர்ந்து நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார்.
அதுமட்டுமின்றி, அணியை சிறப்பாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக-வும் இருந்துள்ளார் ஹர்டிக் பாண்டிய. ஆமாம், சமீபத்தில் ஹர்டிக் பாண்டிய அளித்த பேட்டியில் ; ” நான் முன்பு தோனியுடன் விளையாடும் போது ஒரு கேள்வி கேட்டான். நீங்க (தோனி) எப்படி போட்டியின் அழுத்தத்தை சமாளித்து வருகிறீர்கள் ?
அதற்கு என்னிடம் (ஹர்டிக்) எப்பொழுது போட்டியின் ரன்களை பட்டியலை கவனிக்கவே கூடாது, ஒரு அணிக்கு என்ன தேவை என்பதை மட்டும் தான் யோசிக்க வேண்டும். தோனி சொன்னதை அந்த அறிவுரை என்னை போர்டு சிறந்த வீரராக இருக்க உதவியாக உள்ளது என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.
தோனி கேப்டனாக அணியில் இடம்பெற்ற பிறகு பல வீரர்களுக்கு வாய்ப்புகளை சரியான நேரத்தில் வழங்கியது தான் உண்மை. அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து கொண்டு வந்தார். அவருக்கு (ரோஹித்) -க்கு தொடக்க வீரராக மாற்றியது தோனி.
இந்த பதிவை பற்றி உங்களுடைய கருத்தை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!