நிச்சியமாக உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இவர் இடம்பெற வேண்டும் ; முன்னாள் வீரர் உறுதி

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இப்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி முதல் தொடங்கியது, இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா 2 போட்டிகளில் வெற்றியை கைப்பற்றியுள்ளனர்.

அதனால் நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள் தான் இந்த தொடரை கைப்பற்ற போகின்றனர். நாளை இரவு நடைபெற உள்ள இறுதி போட்டியை எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்..! இந்திய அணி தொடரை கைப்பற்றுமா ?

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இப்பொழுது நடக்கும் போட்டிகளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்களுக்கு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளன.

உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பெற வேண்டும் ? யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் என்பதை பற்றி பல முன்னாள் வீரர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா அவரது கருத்தை பதிவு செய்துள்ளார்.

அதில் “இப்பொழுது இருக்கும் டி-20 உலகக்கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இடம்பெற்றது போல எனக்கு தெரியவில்லை. அவரது திறமையை பற்றி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இதுவரை இவர் டி-20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாடவில்லை என்றாலும், இந்திய அணி இவரை பற்றி யோசிக்க வேண்டும்.”

“அதுமட்டுமின்றி 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் தான் நடைபெற உள்ளது, அதில் ஆவது இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டு பெரிய அளவில் ஒரு நாள் போட்டிகள் விளையாடியது இல்லை.”

“ஷமி ஐபிஎல் போட்டிகளுக்கு பிறகு எந்த போட்டியிலும் விளையாடாமல் இருக்கிறார். நிச்சியமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாட வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஆஷிஷ்.”

இந்திய அணியின் முக்கியமான பவுலர்கள் பட்டியலில் ஷமி உள்ளார் என்பதில் சந்தேகமில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022ல் 16 போட்டிகளில் 20 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். இன்னும் சில நாட்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட உள்ளது இந்திய.

அதில் ஆவது ஷமி -க்கு வாய்ப்பு கிடைக்குமா ? உலகக்கோப்பை போட்டிக்கான இந்தியா கிரிக்கெட் அணியில் முகமது ஷமி இடம்பெற்றால் இந்திய அணிக்கு பலமாக இருக்குமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!