இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாட போவதில்லை ; இந்திய வீரர் உறுதி ; ரசிகர்கள் அதிர்ச்சி ;

0
Virat Kohli

ஜுலே 7 முதல் இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒரு நாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதற்கு முன்பு இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது இந்திய. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிக்கான இந்திய அணியை பற்றி எந்த தகவலையும் பிசிசிஐ அறிவிக்கவில்லை.

இதற்கிடையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நான் இந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாட போவதில்லை என்று கூறியுள்ளார். ஐபிஎல் 2022 போட்டிக்கு முன்பு இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டிகள் நடைபெற்றது.

அதில், தீபக் சஹாருக்கு காயம் ஏற்பட்டது. இருப்பினும் 14 கோடி விலை கொடுத்து ஐபிஎல் போட்டிகளில் தீபக் சஹாரை கைப்பற்றியது சென்னை அணி. ஆனால் மிகவும் மோசமான நிலையில் இருந்த காரணத்தால் அவரால் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனது.

அதனை தொடர்ந்து தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டியிலும் தீபக் சஹார் இடம்பெறவில்லை. இந்திய அணியில் ஒரு வேகப்பந்து வீச்சாளராக மட்டுமின்றி, ஒரு பேட்ஸ்மேனாக விளையாடி ரன்களை குவித்துள்ளார் தீபக் சஹார். இப்பொழுது இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான வீரராக திகழ்கிறார்.

எப்பொழுது தான் அணியில் விளையாடுவீர்கள் என்று பலர் கேள்விகளை எழுப்பிய நிலையில், தீபக் சஹார் அதற்கு ஒரு பதில் கூறியுள்ளார். அதில் ” இப்பொழுது நான் அதிகபட்சமாக 4 ஓவர் பவுலிங் செய்து வருகிறேன். நான் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி கொண்டு தான் வருகிறேன்.”

“இருப்பினும், நான் நிச்சியமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டிகளில் விளையாட முடியாது. அதுமட்டுமின்றி, நான் பிட் ஆன பிறகு, கிளப் போட்டிகளில் விளையாடி என்னுடைய திறனை சரி பார்த்த பிறகு தான், இந்திய அணியில் விளையாட தொடங்குவேன் என்று கூறியுள்ளார் தீபக் சஹார்.”

இப்பொழுது தீபக் சஹாரின் ஆட்டம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது தான் உண்மை. ஏனென்றால், ஒரு பவுலராக மற்றுமின்றி பேட்ஸ்மேனாகவும் சிறப்பாகி விளையாடி ரன்களை குவித்து வருகிறார். தீபக் சஹாருக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ?

உங்கள் கருத்துக்கள் இங்கு வரவேற்க படுகிறது. அதனால் மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here