யார் சாமி இவரு ? இப்படி பேட்டிங் செய்கிறார் ; டெஸ்ட் போட்டியில் இப்படி ஒரு வீரர் இந்திய அணியில் இருக்கிறாரா ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. அதனால் அனைத்து வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்..!

அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக பதவி ஏற்ற பிறகு டெஸ்ட் போட்டிகளில் விளையாட போகிறார். இருப்பினும் நேற்று பயிற்சி ஆட்டம் தொடங்கியது. அதில் இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது போல விளையாடி விக்கெட்டை இழந்துள்ளனர்.

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. அதனால் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக ஆட்டத்தை இழந்து வந்தனர். எந்த ஒரு வீரரும் சொல்லும் அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை.

ஆனால் 7வது இடத்தில் இந்திய அணியில் களமிறங்கிய ஸ்ரீகர் பாரத் விக்கெட் கீப்பர் சிறப்பாக விளையாடி வருகிறார். ஆமாம், இதுவரை 111 பந்தில் 70 ரன்களை அடித்து ஆட்டம் இழக்காமல் விளையாடி வருகிறார். அவரது ஆட்டத்தால் தான் இந்திய அணிக்கு 246 ரன்கள் உள்ளது.

இல்லாவிட்டால், வெறும் 176 ரன்களை தான் இந்திய அணி அடித்திருக்கும். அவருக்கு கொடுக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி விளையாடினால் நிச்சியமாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முக்கியமான வீரராக இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது…!

இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷாப் பண்ட் விளையாடி வருவதால் ஸ்ரீகர் பாரத்திற்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா ? இல்லையா ?? என்ன செய்ய போகிறது இந்திய கிரிக்கெட் அணி ? நிச்சியமாக உடனடியாக ஒரு புதிய அல்லது அனுபவம் இல்லாத வீரரை அணியில் வைத்திருப்பது கடினம் தான்.

ஸ்ரீகர் பாரத்திற்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கொடுக்க படவேண்டுமா ? இல்லையா ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!