இந்திய அணியில் இவர் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று ; ஹர்டிக் பாண்டிய ஓபன் டாக் ;

நேற்று டுப்லின் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பால்பிரணியே தலைமையிலான அயர்லாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

டாஸ்-க்கு பிறகு தீடிரென்று மழை வந்த காரணத்தால் போட்டிகளை தாமதமாக தொடங்கினார்கள். அதனால் 12 ஓவர் மட்டுமே போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்தனர். அதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 4 விக்கெட்டை இழந்த நிலையில் 108 ரன்களை அடித்தனர்.

அதில் ஸ்டிர்லிங் 4, ஹரி டெக்டர் 64,டக்கர் 18 ரன்களை அதிகபட்சமாக அடித்தனர். பின்பு 109 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய கிரிக்கெட் அணி. தொடக்க வீரரான தீபக் ஹூடா 47, இஷான் கிஷான் 26 ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை உருவாக்கினார்கள்.

அதனால் இந்திய கிரிக்கெட் அணி 9.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்த நிலையில் 111 ரன்களை அடித்து 7 விக்கெட்டை வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வென்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. அதில் சூர்யகுமார் யாதவ் 0,ஹர்டிக் பாண்டிய 24, தினேஷ் கார்த்திக் 5, தீபக் ஹூடா 47 ரன்களை அடித்துள்ளனர்.

இந்த முறை அணியில் ரோஹித் சர்மா, ரிஷாப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் போன்ற வீரர்கள் யாரும் அணியில் இல்லாத காரணத்தால் ஹர்டிக் பாண்டிய இந்திய அணியின் கேப்டனாக விளையாடினார். போட்டி முடிந்த பிறகு பேசிய ஹர்டிக் பாண்டிய கூறுகையில் ;

“சீரியஸ் ஆட்டத்தில் முதல் போட்டியில் வெற்றிபெறுவது மிகவும் அருமையாக தான் உள்ளது. அதிலும் குறிப்பாக எங்களுக்கு ஒரு அணியாக வெல்வது சிறப்பாக உள்ளது.எப்பொழுது உம்ரன் மலிக் அவரது அணிக்காக சிறப்பாக விளையாடுவது வழக்கம். நான் அவரிடம் பேசும்போது தான் ஒரு விஷயம் புரிந்தது.

“அவருக்கு (ஹர்டிக்) எப்பொழுதும் இறுதியாக பவுலிங் செய்வது தான் சரியாக இருக்குமே என்று. அயர்லாந்து அணியும் சிறப்பாக விளையாடினார்கள். அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன் டெக்டர் விளையாடிய ஷாட்ஸ் மிகவும் அருமையாக இருந்தது, நிச்சியமாக அடுத்த போட்டியில் அதனை வெளிப்படுத்துவார் என்று கூறியுள்ளார் ஹர்டிக் பாண்டிய.

இந்திய கிரிக்கெட் அணி 1 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இறுதியாக நடைபெற உள்ள டி-20 போட்டி நாளை இரவு 9 மணிக்கு தொடங்க உள்ளது. அதில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றுமா ? இல்லையா ?