பா..! என்ன இந்த பையன் இப்படி பேட்டிங் செய்கிறார் ; ரஞ்சி கோப்பை போட்டியில் பட்டைய கிளப்பிவிட்டார் ; வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் உறுதி ;

இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் பல நடைபெற்று வருகிறது. அதற்கிடையில் இந்தியாவுக்குள் ரஞ்சி கோப்பை (டெஸ்ட் போட்டிகள்) நடைபெற்றது வருகிறது.

அதிலும் கடந்த ஜூன் 22ஆம் தேதி அன்று இறுதி ரஞ்சி கோப்பை போட்டிகள் நடைபெற தொடங்கியது. அதில் ஆதித்யா ஸ்ரீவஸ்தவா தலைமையிலான மத்திய பிரதேஷ் அணியும், ப்ரித்வி ஷாவ் தலைமையிலான மும்பை அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணி முதல் இன்னிங்ஸ்-ல் 127.4 ஓவர் முடிவில் 10 விக்கெட்டை இழந்த நிலையில் 374 ரன்களை அடித்துள்ளனர். அதில் பிருத்வி ஷாவ் 47, ஜெய்ஸ்வால் 78, அர்மான் ஜாபர் 26, சுவீட் பர்கர் 18, சர்பாரஸ் கான் 134, ஹர்டிக் டமோர் 24, தனுஷ் கோட்டிங் 15 ரன்களை அடித்துள்ளனர்.

அடுத்ததாக இப்பொழுது மத்திய பிரதேஷ் அணி பேட்டிங் செய்யது வருகின்றனர். அதில் 60.3 ஓவர் முடிவில் 174 ரன்களை அடித்த நிலையில் ஒரு விக்கெட்டை இழந்துள்ளனர். அதில் யாஷ் துபே 70, ஹிமான்ஷு மன்றி 31, சுமன் எஸ். சர்மா 65 ரன்களை அடித்துள்ளனர்…!

இதனை பற்றி பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான இயன் பிஷப் சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” இதுவரை நடந்த போட்டிகளில் சர்பாரஸ் கான் 81 ரன்கள் என்ற கணக்கில் விளையாடியுள்ளார். இதுவெறும் உதாரணம் தான். ஆனால் மறக்க முடியாத ஒன்று என்று கூறியுள்ளார் இயன் பிஷப்.”

சதம் அடித்த பிறகு பேசிய சர்பாரஸ் கான் கூறுகையில் : “இந்த சதம் என்னுடைய அப்பாவுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். ஏனென்றால் அவர் செய்த தியாகங்கள் தான் அதற்கு முக்கியமான காரணம், நான் எப்பொழுது சோர்வாக இருந்தாலும் என்னுடைய கையை பிடித்து கொண்டு ஆறுதலாக என்னிடம் பேசுவார்”.

“என்னுடைய வாழ்க்கையில் இது எல்லாம் ஒரு சின்ன கனவு போல தான். ஆமாம், இந்த இரு சீசன்களில் நான் கிட்டத்தட்ட 2000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளேன் என்று கூறியுள்ளார் சர்பாரஸ் கான்.”