இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2022 போட்டிகள் இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் தொடங்கியது. அதில் முதல் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது. பின்னர் இன்று இரவு ப்ராபோர்னே மைதானத்தில் சென்னை அணி விளையாட உள்ளது.
அதில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும், ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளனர். முதல் போட்டியில் லக்னோ மற்றும் சென்னை ஆகிய இரு அணிகளும் தோல்வியை சந்தித்துள்ளார்.
அதனால் இரண்டாவது போட்டியில் வெற்றியை கைப்பற்ற இரு அணிகளும் முயற்சிகளை எடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கிடையில், சென்னை அணியின் ஆல் – ரவுண்டரான ப்ராவோ சமீபத்தில் அளித்த பேட்டியில் ; அவர் எப்படி டி-20 வீரராக உருவெடுத்தார் என்பதை பற்றி கூறியுள்ளார்.
அதனை பற்றி ப்ராவோ கூறுகையில் ; “அந்த ஒரு பந்து தான் என்னுடைய டி-20 போட்டிக்கு அடித்தளமாக மாறியது. அதுமட்டுமின்றி, அப்பொழுது நான் உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் புகழ்பெற்ற வீரராக அறிமுகம் ஆனேன். எனக்கு இப்பொழுது எப்படி பவுலிங் வீசுவது என்று தெரியவில்லை”.
“சில நேரங்களில் அங்கு என்ன தோன்றுகிறதோ அதனை தான் நான் செய்வேன். நான் பவுலிங் செய்து பல பேட்ஸ்மேன் விக்கெட்டை கைப்பற்றியுள்ளேன். ஆனால் அதில் மறக்க முடியாத ஒன்று என்றால் யுவ்ராஜ் சிங் விக்கெட்டை கைப்பற்றியயது தான்.”
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு இடையேயான போட்டியில் இந்திய அணி கிட்டத்தட்ட வெற்றியை கைப்பற்ற சென்றுவிட்டனர். அப்பொழுது இறுதி ஒவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அப்பொழுது யுவ்ராஜ் சிங் என்னுடைய பந்து வீச்சை எதிர்கொள்ள தயாராக இருந்தார்.”
அப்பொழுது முதல் இரு பந்தில் பவுண்டரிகளை விளாசினார் யுவ்ராஜ் சிங். பின்னர் நான் வீசிய ஸ்லோ பந்தை அவரால் சரியாக எதிர்கொள்ள முடியாத காரணத்தால் அவர் விக்கெட்டை இழந்தார். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது. அதனை எப்பொழுதும் மறக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் ப்ராவோ.
இந்த முறை நடந்த மெகா ஏலத்தில் இடம்பெற்ற ப்ராவோ -வை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4.40 கோடி விலை கொடுத்து கைப்பற்றியுள்ளது. ப்ராவோ கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளையாடி வருகிறார்…!