KKR vs PBKS ; கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பட்டைய கிளப்ப போகும் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுதான் ; அப்போ வெற்றியா ?

0

போட்டி என் ; 8 நாளை இரவு வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளனர். இதுவரை இரு அணிகளும் 29 போட்டிகளில் நேருக்கு நேர் விளையாடியுள்ளது.

அதில் கொல்கத்தா அணி 19 போட்டிகளிலும், பஞ்சாப் கிங்ஸ் அணி 10 போட்டிகளும் வெற்றியை கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி இந்த முறை மெகா ஏலம் நடந்து முடிந்த காரணத்தால் பஞ்சாப் கிங்ஸ் அணி சற்று வலுவான அணியாக தெரிகிறது. ஆமாம், கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தது.

அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி இமாலய இலக்கை கைப்பற்றி பெங்களூர் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. இருப்பினும் நிச்சியமாக கொல்கத்தா அணிகிய எதிரான போட்டியில் ப்ளேயிங் 11 பவுலிங் பக்கத்தில் சில மாற்றங்கள் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய பஞ்சாப் அணி பவுலர்கள் வெறும் இல்லை விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளனர். அதனால் நிச்சியமாக ப்ளேயிங் 11ல் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க போகும் ப்ளேயிங் 11ன் உத்தேச பட்டியல் இதுதான் ; முழு விவரம் இதோ ;

ஓப்பனிங் பேட்ஸ்மேன் ; மயங்க் அகர்வால் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் செய்ய போகின்றனர். பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் அருமையான தொடக்க ஆட்டத்தை செய்துள்ளனர். அதனால் இதில் எந்த மாற்றமும் இருக்காது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் மயங்க் அகர்வால் (32), ஷிகர் தவான் (43) ரன்களை அடித்துள்ளனர்.

டாப் ஆர்டர் : ராஜபக்ச, லிவிங்ஸ்டோன் போன்ற இருவர் உள்ளனர். இதில் லிவிங்ஸ்டோன் பவுலிங் பெரிய அளவில் இல்லாவிட்டாலும் நிச்சியமாக பேட்டிங் பஞ்சாப் அணிக்கு தேவையான ஒன்றாக உள்ளது. பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜபக்ச (43), லிவிங்ஸ்டோன் (19) ரன்களை அடித்துள்ளனர்.

மிடில் ஆர்டர்:ஷாருக்கான் மற்றும் ஓடியன் ஸ்மித் போன்ற வீரர்கள் உள்ளனர். இவர்களுது அதிரடியான ஆட்டம் தான் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் போட்டியில் வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. ஆமாம், இறுதியாக அதிக ரன்கள் இருந்த நிலையில் ஷாருக்கான் (24), ஸ்மித் (25) ரன்களை அடித்துள்ளனர்.

பவுலர்கள்: கடந்த போட்டியில் விளையாடிய அர்ஷதீப் சிங், ஹார்ப்ரீட் சிங் , சந்தீப் சர்மா, ராகுல் சஹார் போன்ற வீரர்கள் நிச்சியமாக அணியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளனர். அதுமட்டுமின்றி , கடந்த முறை ராஜ் பாவா பேட்டிங் பெரிய அளவில் இல்லாத காரணத்தால் அவருக்கு பதிலாக ரிஷி தவான் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here