எவ்வளவு சொன்னாலும் இவங்க மட்டும் கேட்பதே இல்லை ; தோல்விக்கு இவர்கள் தான் காரணம் ; உண்மையை உடைத்த கே.எல்.ராகுல்

0

நேற்று போலந்து பார்க்கில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், தெம்பா பவுமா தலைமையிலான சவுத் ஆப்பிரிக்கா அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

டாஸ் மட்டுமே இந்திய அணி வென்றது, ஆனால் போட்டியை இல்லை. ஆமாம் …! தொடக்கத்தில் சில ஓவர்கள் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியது இந்திய. பின்னர் தவான் ஆட்டம் இழந்த பிறகு விராட்கோலி எந்த ரன்களையும் அடிக்காமல் ஆட்டம் இழந்தார்.

அதனால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. ரிஷாப் பண்ட் ஆடிய அதிரடியான ஆட்டத்தால் அதிகபட்சமாக 85 ரன்களை அடித்து இந்திய அணியின் ரன்களை உயர காரணமாக இருந்தார் ரிஷாப் பண்ட். பின்னர் இறுதி வரை விளையாடிய ஷர்டுல் தாகூர் ஆட்டம் இழக்காமல் 40 ரன்களை அடித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 287 ரன்களை அடித்துள்ளது இந்திய. அதில் கே.எல்.ராகுல் 55, ஷிகர் தவான் 29, விராட்கோலி 0, ரிஷாப் பண்ட் 85, ஷ்ரேயாஸ் ஐயர் 11, வெங்கடேஷ் ஐயர் 22, ஷர்டுல் தாகூர் 40 மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் 25 ரன்களை அடித்துள்ளது இந்திய.

288 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது சவுத் ஆப்பிரிக்கா. சவுத் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரரான ஜன்னிமேன் மலன் மற்றும் டி-காக் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து 169 ரன்களை அடித்துள்ளனர். பின்னர் கேப்டனான பவுமா , மார்க்ரம், டூஸ்ஸன் ஆகிய மூவரும் ரன்களை அடித்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

அதனால் 48.1 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 288 ரன்களை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது சவுத் ஆப்பிரிக்கா. அதனால் 2 – 0 என்ற நிலையில் தொடரையும் கைப்பற்றியுள்ளது சவுத் ஆப்பிரிக்கா.

போட்டி முடிந்த பிறகு கே.எல்.ராகுல் அளித்த பேட்டியில் , தோல்வியை குறித்து கூறுகையில்; எதிர் அணி வீரர்கள் அவர்களது சொந்த மைதானத்தில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதேபோல நாங்களும் சில தவறுகளை செய்து கொண்டே தான் இருக்கிறோம், அனால் அதில் இருந்து பல விஷயங்களை கற்றுள்ளேன்.

எங்களுக்கு மிடில் ஆர்டர் பேட்டிங் சரியாகவே அமைவதே இல்லை, அதுவும் இந்த மாதிரி அணியை எதிர்கொள்ளும் போது மிடில் ஆர்டர் சரியாக இருக்க வேண்டும். இந்திய அணியின் பவுலர்கள் என்னதான் விதவிதமாக பவுலிங் செய்தாலும் சவுத் ஆப்பிரிக்கா வீரர்கள் பார்ட்னெர்ஷிப் செய்து வருகின்றனர்.

முதல் போட்டியில் ஷிகர் தவான், விராட்கோலி மற்றும் இரண்டாவது போட்டியில் ரிஷாப் பண்ட் போட்டியில் அருமையாக விளையாடியுள்ளார்கள். அதுமட்டுமின்றி, இறுதி நேரத்தில் ஷர்டுல் தாகூர் ஆட்டம் இழக்காமல் ரன்களை அடித்துள்ளார். அதேபோல தான் பவுலிங்கில் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சஹால். முதல் இரண்டு போட்டிகளில் அதிக பாடங்களை கற்றுக்கொண்டுள்ளேன்.

அதனால் மூன்றாவது போட்டியில் எப்படியாவது வெற்றியை கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல். இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here