விராட்கோலியின் அதிரடியான ஆட்டம் காணாமல் போனதற்கு இதுதான் முக்கியமான காரணம் ; கெவின் பீட்டர்சன் ஓபன் டாக் ;

0

இந்த மாதிரி இக்கட்டான சூழ்நிலையில் விராட்கோலி விளையாடுவது சிரமம் தான். அவருடைய அதிரடியான ஆட்டம் காணாமல் போனதற்கு இதுதான் காரணம்.

இப்பொழுது இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான தொடர் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு தான் மூன்று டெஸ்ட் தொடர் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. அதில் 2 – 1 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது.

டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, எப்படியாவது ஒருநாள் போட்டிக்கான தொடரில் ஆவது வெல்ல வேண்டும் என்று இந்திய அணி பலமான பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் இப்பொழுது இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது இந்திய.

இதில் கே.எல்.ராகுல் தான் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். விராட்கோலி-யை எந்த விதமான முன் அறிவிப்பும் இல்லாமல் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து வெளியேற்றினார்கள். அதனை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவி விலகிய விராட்கோலியை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் அளித்த பேட்டியில் ; யாரெல்லாம் விராட்கோலி-யை பற்றி தவறான கருத்துக்களை தெரிவித்து வருகிறது முட்டாள் தான், ஏனென்றால் Bio-Bubble -ல் விளையாடுவது அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை.

நன்கு கவனித்து பாருங்கள், விராட்கோலி மக்கள் அனைவரும் மைதானத்தில் இருந்த போது எப்படியெல்லாம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் என்று. அவருக்கு மைதானத்தில் மக்கள் கூட்டம் தேவைப்படுகிறது. மக்கள் இல்லாமல் வெறும் மைதானத்தில் அவரால் விளையாடுவது சிரமம், அதுவும் ஒரு வலி தான்.

விராட்கோலி மட்டுமின்றி, பல வீரர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றனர். Bio-Bubble என்ற கட்டத்தில் விளையாடும் போது நிச்சியமாக அதில் எந்த சுவாரசியமும் இருக்காது . விராட்கோலி டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகியது அவருடைய மன அழுத்தத்தை குறைப்பதற்கு தான்.

இந்த கொரோனா காலத்தில் கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி, டென்னிஸ், கால் பந்து விளையாடும் வீரர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டு தான் வருகின்றனர் என்று கூறியுள்ளார் கெவின் பீட்டர்சன். தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 51 ரன்களை அடித்துள்ளார். ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் டக் அவுட் ஆகியுள்ளார் விராட்கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here