அட..! கொடுமையே..! இந்திய அணிக்கு இந்த நிலைமையா ? கடுப்பான கிரிக்கெட் ரசிகர்கள்..!

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. முதல் இரு போட்டிகளிலும் தென்னாபிரிக்கா அணியும், அடுத்த இரு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியும் வென்றுள்ளனர். பின்பு நேற்று தான் இறுதி போட்டி நடைபெற்றது.

ஐந்தாவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். ஆனால் பேட்டிங் செய்வதற்கு முன் மழை வந்த காரணத்தால், சற்று போட்டிகள் தாமதமானது. இருப்பினும், சில நேரங்களுக்கு பிறகு தொடங்கியது போட்டி. அதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை.

3.3 ஓவர் முடிவில் 28 ரன்களை அடித்த நிலையில் 2 விக்கெட்டை இழந்தது இந்திய அணி. அதன்பின்னர், தொடர்ந்து மழை மீண்டும் வந்த காரணத்தால், போட்டியை நிறுத்தினார்கள். பின்பு மழை விடாமல் அதிகமாக இருந்த காரணத்தால் போட்டியை ரத்து செய்தனர்.

அதனால் ஐந்தாவது போட்டி எந்த முடிவும் இல்லாமல், போனது. இரு அணிகளும் தலா இரு போட்டிகளை வென்ற நிலையில் சம நிலையில் உள்ளனர்.

ஐந்தாவது போட்டி விளையாடிருந்தால் யார் வெற்றி பெற்றிருக்க முடியும் ?

நிச்சியமாக தென்னாபிரிக்கா அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால், மழை வந்த நிலையில் விளையாடுவது மிகவும் சிரமம், முதலில் இந்தியா கிரிக்கெட் அணி தான் பேட்டிங் செய்து வந்தது. தொடக்க வீரர்களான இஷான் கிஷான் 15 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 10 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இஷான் கிஷான் தான் அதிகபட்சமாக 206 ரன்களை அடித்துள்ளார், அவரை தொடர்ந்து ஆல் – ரவுண்டர் ஹர்டிக் பாண்டிய 117 ரன்களையும், டேவிட் மில்லர் 96 ரன்களையும் அடித்துள்ளார். அதேபோல, பவுலிங்கில் தென்னாபிரிக்கா வீரர்களை விட இந்திய வீரர்கள் தான் அதிக விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

அதில் ஹர்ஷல் பட்டேல் 7, புவனேஸ்வர் குமார் 6, யுஸ்வேந்திர சஹால் 6, ;லுங்கி நிகிடி 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியிலும், மற்றும் 2022ஆம் ஆண்டு தொடக்கத்தில் தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் நடந்தது.

அதில் இந்திய அணி ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே வென்ற நிலையில் தொடரை கைப்பற்ற முடியாமல் போனது. இருப்பினும், மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடிய இந்திய அணி ஒரு போட்டியில் கூட தென்னாபிரிக்கா அணியை வெல்லவில்லை.

அதனால் இந்த டி-20 போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக இருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக மழை பெய்த காரணத்தால் டி-20 போட்டிக்கான தொடரை கைப்பற்ற முடியாமல், சம நிலையில் உள்ளது. மழை பெய்தது எந்த அணிக்கு சாதகமாக மாறியுள்ளது ??