நான் பேட்டிங் செய்ய வந்த போது, ஹர்டிக் பாண்டிய இதனை தான் என்னிடம் சொன்னார் ; தினேஷ் கார்த்திக் பேட்டி

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா :

நேற்று நடந்த நான்காவது போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி வழக்கம் போல பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. வழக்கம் போல ருதுராஜ், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற வீரர்கள் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர்.

இருப்பினும் ஹார்டிக் பாண்டிய மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன. அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த நிலையில் 169 ரன்களை அடித்தனர். அதில் ருதுராஜ் 5, இஷான் கிஷான் 27, ஸ்ரேயாஸ் ஐயர் 4, ரிஷாப் பண்ட் 17, ஹர்டிக் பாண்டிய 46, தினேஷ் கார்த்திக் 55 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் அமையவில்லை. இருப்பினும் பார்ட்னெர்ஷிப் சரியாக அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது தென்னாபிரிக்கா.

அதனால் 16.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்த நிலையில் 87 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் இந்திய கிரிக்கெட் அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் யார் வெற்றி பெற போகிறார்களோ, அவர்கள் தான் தொடரை கைப்பற்ற போகின்றனர்.

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கியமான காரணமே, தினேஷ் கார்த்திக் என்று கூட சொல்லாமல். ஏனென்றால் அதிரடியாக விளையாடி 55 ரன்களை குவித்தார். அவர் (தினேஷ் கார்த்திக்) அந்த ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால் நிச்சியமாக இந்திய அணியின் ரன்கள் 120 என்ற நிலையில் இருந்திருக்கும்.

அப்பொழுது இந்திய அணிக்கு அழுத்தமாகவும், தென்னாபிரிக்கா அணிக்கு சாதகமாகவும் மாறியிருக்கும். இதனை பற்றி பேசிய இந்திய அணியின் அதிரடி மன்னன் தினேஷ் கார்த்திக் கூறுகையில் : “இப்பொழுது நான் மிகவும் சந்தோசமாக உள்ளேன். இப்பொழுது தான் நான், பாதுகாப்பாக இருப்பது போல உணர்கிறேன்.”

“கடந்த போட்டியில் (3வது போட்டியில்) நான் நினைத்த மாதிரி விளையாடவில்லை, அதனால் தான் இன்றைய போட்டியில் சரியாக விளையாடினேன். எல்ல புகழும் என்னுடைய பயிற்சியாளருக்கு தான். எதிர் அணியின் பவுலிங் மிகவும் சிறப்பாக செய்தனர். அதனால் தான் பவுண்டரிகளை அடிக்க மிகவும் கடினமாக இருந்தது.”

“எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் பொதுவாக எங்களை நல்ல தொடக்கத்திற்கு கொண்டு வர போதுமான அளவு இரக்கம் காட்டினார்கள். நான் ஹர்டிக் பாண்டியவுடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது , உன்னுடைய நேரத்தை நீ எடுத்துக்கொள் என்று அவர் (ஹர்டிக் ) என்னிடம் சொன்னார்.”

“பெங்களூர் தான் என்னுடைய ஹாம் மைதானம். நான் பெங்களூர் அணிக்கு எதிராக விளையாடியது இல்லை. அதனால் இறுதி போட்டி அங்கு நடைபெற உள்ளதால் மிகவும் ஆர்வமாக தான் உள்ளது. இப்பொழுது, ட்ரெஸ்ஸிங் ரூம் மிகவும் அமைதியாக உள்ளது, மிகவும் சிறப்பாக இந்திய அணியை வழிநடத்தி வருகிறார்( ராகுல் டிராவிட்) என்று கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here