இவருக்கு ஏன் இந்திய அணியின் ப்ளேயிங்-11ல் இடம் கொடுக்க படவில்லை ? இனி வாய்ப்பு கிடைக்காத ?

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூன் 9ஆம் தேதி தொடங்கிய நிலையில் இதுவரை நான்கு டி-20 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.

அதில் 2 – 2 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில், அதனால் நாளை இரவு நடைபெற உள்ள இறுதி போட்டியில் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. நேற்று நடந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 169 ரன்களை அடித்தனர். பின்பு 170 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தனர். அதனால் 16.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.

82 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி. நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் நிச்சயமாக மாற்றம் இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான். ஏனென்றால், முதல் இரு போட்டிகளில் தோல்வியை பெற்றது இந்திய.

ஆனால் முன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் அருமையாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து தென்னாபிரிக்கா அணியை வென்றுள்ளது இந்திய. அதனால் அதே அணியை வைத்துதான் இறுதி போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவருக்கு ஏன் அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை ?

ஐபிஎல் 2021 போட்டியின் போது கொல்கத்தா அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர், அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் இந்திய கிரிக்கெட் அணியிலும் இடம் கிடைத்தது. ஐபிஎல் போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கி, இப்பொழுது மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து வருகிறார்.

ஹர்டிக் பாண்டிய இந்திய அணியில் விளையாட நேரத்தில் வெங்கடேஷ் ஐயருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இடம்பெற்ற வெங்கடேஷ் ஐயருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

நாளை இரவு நடைபெற உள்ள போட்டி மிகவும் முக்கியமான ஒன்றாக இருப்பதால் நிச்சியமாக வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு கிடைப்பது சிரமம் தான். இந்திய அணியில் ஹர்டிக் பாண்டிய அல்லது வெங்கடேஷ் ஐயர், இதில் யார் சிறந்த ஆல் – ரவுண்டர் என்பதை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!