முதல் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்..! அதன்பின்பு அவ்வளவு தான் ; ரன்களே அடிக்கமாட்டார் ; கபில் தேவ் ஓபன் டாக் ;

0
kapil Dev

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. அதில் இந்திய அணி ஒரு போட்டியிலும், தென்னாபிரிக்கா அணி இரு போட்டிகளும் வென்றுள்ளது.

இன்னும் இரு போட்டிகள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை கைப்பற்ற முடியும். நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்களை அடித்தனர். ஆனால் தென்னாபிரிக்கா அணிக்கு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாத காரணத்தால் தொடர்ந்து விக்கெட்டை இழந்தது.

அதனால் இறுதி வரை போராடி 131 ரன்களை மட்டுமே அடித்தது தென்னாபிரிக்கா அணி. அதனால் 48 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி. கிரிக்கெட் போட்டி நடைபெற்றால் ஒரு வீரரை பற்றி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவ் சமீபத்தில் ஒரு முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் “இந்திய அணியில் முக்கியமான விக்கெட் கீப்பர் யார் என்று என்னிடம் கேட்டால் நான், நிச்சியமாக இஷான் கிஷான், தினேஷ் கார்த்திக் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய மூன்று வீரர்களை தான் சொல்லுவேன்.”

“இந்த மூன்று வீரர்களும் ஒரே மாதிரி தான் விளையாடி வருகின்றனர். ஆனால் பேட்டிங் என்று பார்த்தால் ஒருவருக்கு ஒருவர் மேல் என்பது போல தான் விளையாடி வருகின்றனர். மூன்று வீரர்களும் நிச்சியமாக இந்திய அணிக்காக போட்டியில் வெற்றி பெற கூடிய திறமை உள்ளது.”

“அதிலும் குறிப்பாக நான் சஞ்சு சாம்சன் மேல் மிகப்பெரிய அளவில் வருத்தத்தில் உள்ளேன். ஏனென்றால், சஞ்சு சாம்சன் திறமையான வீரர் தான். ஆனால் 2 போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார் பின்னர் அவ்வளவு தான். ஒரு மாதிரியாக எப்பொழுதும் விளையாடுவதே இல்லை.” என்று கபில் தேவ் கூறியுள்ளார்.

தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டி-20 போட்டியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இருப்பினும், ஐபிஎல் 2022யில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய சஞ்சு சாம்சன், இறுதி போட்டியில் தோல்வியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here