நான் இப்படி வெறித்தமனாக விளையாடுவதற்கு முக்கியமான காரணம் இதுதான் ; தீபக் ஹூடா பேட்டி ;

இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான இந்தியா கிரிக்கெட் அணியும், ஆண்ட்ரே பால்பிரண்யே தலைமையிலான அயர்லாந்து அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய போவதாக ஹர்டிக் பாண்டிய முடிவு செய்தார்.

முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பான தொடக்க ஆட்டம் அமைந்தது. தொடக்க வீரரான இஷான் கிஷான் பெரிய அளவில் ஆட்டம் விளையாடவில்லை. இருப்பினும் சாம்சன் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவரின் ஆட்டம் சிறப்பாக அமைந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டை இழந்த நிலையில் 225 ரன்களை அடித்துள்ளனர். அதில் சஞ்சு சாம்சன் 77, இஷான் கிஷான் 3, தீபக் ஹூடா 104, சூரியகுமார் யாதவ் 15, ஹர்டிக் பாண்டிய 13, புவனேஸ்வர் குமார் 1 ரன்களை அடித்தனர். பின்பு 226 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அயர்லாந்து.

இந்திய கிரிக்கெட் வீரர்களை போலவே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அதிலும் புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் பட்டேல், உம்ரன் மாலிக் போன்ற பவுலர்களை கலங்க வைத்தனர். ஆமாம், இறுதி வரை போராடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 221 ரன்களை அடித்தனர்.

அதனால் 4 ரன்கள் வ்வித்தியாசத்தில் அயர்லாந்து அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. அதில் ஸ்டிர்லிங் 40, ஆண்ட்ரே பால்பிரண்யே 60, ஹார்ரி டெக்டர் 39, டாக்ரெல் 34, மார்க் அடைர் 23 ரன்களை அடித்துள்ளனர். இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் யார் என்று கேட்டால் ?

அது தீபக் ஹூடா தான், ஆமாம் முதல் போட்டியில் 47* மற்றும் இரண்டாவது போட்டியில் 104 ரன்களை அடித்துள்ளார். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் தொடக்க வீரரான தீபக் ஹூடா கூறுகையில் : “நான் ஐபிஎல் 2022 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறேன்.”

“அதில் எப்படி விளையாடினானோ, அதனை தான் விளையாடி வருகிறேன். எனக்கு இப்படி வெறித்தனமாக விளையாடுவது தான் மிகவும் பிடிக்கும். நான் தொடக்க வீரராக விளையாடுவதால், எனக்கு அதிக நேரம் கிடைக்கும். அதனால் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட முடிகிறது.”

“சஞ்சு சாம்சன் என்னுடைய சின்ன வயது நம்பன், அவருடன் விளையாடியது எனக்கு மிகவும் சந்தோசமாக தான் உள்ளேது. இங்குள்ள ரசிகர்கள் மிகவும் ஆதரவாக இருப்பதால் நான் இந்தியாவில் விளையாடியது போல தான் நான் உணர்தேன். ஆதரவு கொடுத்த அனைவர்க்கும் நன்றி என்று கூறியுள்ளார் தீபக் ஹூடா.”