தோற்க போகிறோம் என்று தெரிந்தவுடன் எங்கள் வீரர்களிடம் சொன்னது இதுதான் ; ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டி ;

0

நேற்று மும்பையில் உள்ள பட்டில் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டூப்ளஸிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சரியாக பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. அதனால் தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே வந்தது கொல்கத்தா அணி. இறுதி வரை போராடிய கொல்கத்தா அணி அனைத்து விக்கெட்டை இழந்து 128 ரன்களை மட்டுமே அடித்தனர்.

பின்பு 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பெங்களூர் அணி. கொல்கத்தா அணிக்கு நடந்த மாதிரி தான் பெங்களூர் அணிக்கும் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. இருப்பினும் இறுதிவரை போராடிய பெங்களூர் அணி 19.2 ஓவர் முடிவில் 132 ரன்களை அடித்து 3 விக்கெட்டை வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது.

தோல்வியை கைப்பற்றிய கொல்கத்தா அணி புள்ளிபட்டியலில் 2 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணியின் வெற்றிக்கு பல காரணங்கள் உள்ளனர். அதில் ஹசரங்க வீசிய பந்து வீச்சில் கொல்கத்தா அணி சுருண்டு விட்டது தான் உண்மை. 4 ஓவர் பவுலிங் செய்து 20 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

போட்டி முடிந்த பிறகு அணியின் தோல்வியை பற்றி பேசிய கொல்கத்தா அணியின் கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் கூறுகையில் ; “இந்த போட்டியில் அதிக ஆர்வம் இருந்தது. நாங்கள் பவுலிங் செய்வதற்கு முன்பு எங்கள் அணி வீரர்களிடம் “இந்த போட்டியில் நாம் என்ன செய்ய போகிறோம் என்பதை வைத்து தான் நம்முடைய திறனை முடிவு செய்ய முடியும்.”

“நாம் தோற்றாலும் சரி ஜெயித்தாலும் சரி அது வேறு என்று கூறினேன் (ஸ்ரேயாஸ் ஐயர்).இந்த முறை எதிர் அணியான (பெங்களூர்)அணியை எதிர்கொண்ட விதம் எங்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. இதனை வைத்து அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்.”

129 ரன்கள் தான் இருந்தாலும் எங்கள் அணி வீரர்கள் எதிர் அணியை இறுதி ஓவர் வரை கொண்டு சென்றது சிறப்பான ஒரு விஷயம் தான். கடினமான சூழ்நிலையில் நான் வெங்கடேஷ் ஐயருடம் பேட்டிங் செய்ய முடிவு ஏனென்றால் சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் அவருக்கு உண்டு.” என்று கூறியுள்ளார் ஷ்ரேயாஸ் ஐயர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here