செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் 20 20 மக்களின் வரவேற்பை பெற்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடக்கவில்லை என்றாலும் ஐக்கிய அரபு நாட்டில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகள் நடந்து வருகின்றன.
ஐபிஎல் ஆரம்பித்து 15 நாட்கள் கழித்து மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைய உள்ளார். யார் அந்த வீரர்?
இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் அவர்கள் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அவரது தனிப்பட்ட கருத்தால் மற்றும் அவரது குடும்ப பிரச்சனை காரணமாக சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் முன்பே அவர் கூறியுள்ளார்.
இப்பொழுது அதெல்லாம் சரியாகி விட்டதால் பைபிள் 20 20 போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாட விரும்புவதாக பென் ஸ்டோக்ஸ் கூறியுள்ளார். அவரது சொந்த ஊரில் இருந்து இன்னும் சில நாட்களில் ஐக்கிய அரபு நாட்டுக்கு வருவதாக செய்திகள் வெளியாகின.
பிசிசிஐ பின்பற்றும் சில நடவடிக்கைகள் மற்றும் விதிமுறைகளின்படி ஆறு நாட்கள் அவரை தலைமை படுத்துவதாக கூறியுள்ளனர். ஆறு நாட்கள் கழித்து கொரனோ பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே அவர் ராஜஸ்தான் அணியில் இணைந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
இதுவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று போட்டிகள் விளையாடி அதன் இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.