கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி ஆரம்பித்த இந்த ஐபிஎல் 20 20 போட்டிகள் ஆர்வமாக நடைபெற்று வருகிறது. இந்த வருட ஐபிஎல் 20 20 புள்ளி பட்டியல் தலைகீழாக உள்ளது. ஏனென்றால் 2008 முதல் 2012 வரை புள்ளிப் பட்டியலில் மேலிருந்த அனைத்து அணிகளும் இந்த வருடம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் போன்ற பணிகளாகும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செப்டம்பர் 19-ம் தேதி நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. ரெய்னா இல்லை என்றாலும் அந்த இடத்தில் ராயுடு அவர்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
அடுத்த மூன்று போட்டிகளிலும் சென்னை அணி தோல்வியை சந்தித்துள்ளது. தொடக்க வீரரான வாட்சன் சரியாக ஆடவில்லை. நாயுடு அவர்கள் காயம் காரணமாக டெல்லி மற்றும் ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை.
கடந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 164 ரன்கள் எடுத்துள்ளனர்.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ். தொடக்க வீரர் வாட்சன் வெறும் 1 ரன்களிலும் டு பிளேசிஸ் 22 எடுத்தும் அம்பதி ராயுடு 8 ரன்களிலும் கேதர் ஜாதவ் 3 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தனர். அதன் பின்னர் இறங்கிய தோனி மற்றும் ஜடேஜா நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெற்றிப் பாதைக்கு எடுத்துச் சென்றனர்.
இறுதிவரை போராடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடந்த நான்கு போட்டிகளிலும் கேதர் ஜாதவ் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை என்பதால் அவருக்கு பதிலாக வேறு இளம் வீரரை கொண்டுவர வேண்டும் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் கூறிவந்தனர்.
அதற்கு பதிலளித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங்!!!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் -4 வது இடத்தில் இறங்கி வருகிறார். அவருக்கு மாற்றாக வேறு எந்த ஒரு வீரரையும் இறக்க முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்யும்போது விரைவாக விக்கெட் அடைந்தால் கேதர் ஜாதவ் விளையாடுவார். இறுதிநேரத்தில் விக்கெட் இழந்தாள் தோனி ஆட்டத்தில் இறங்குவார் என்று கூறியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்!!