ஐபிஎல் 2020: கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் போட்டி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. கடினமான சூழ்நிலைகளை தாண்டி இந்த வருடம் ஐபிஎல் 2020 ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.14வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டி , முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்கத்தில் நல்ல ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்றாலும் ஐதராபாத் அணி வீரர்கள் நன்றாக விளையாடி 164 ரன்களை எடுத்தனர்.
முதல் 10 ஓவரில் 80 ரன்களை மட்டுமே எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்று விக்கெட்கள் இழந்தாலும் அதன் பின்னர் இறங்கிய வீரர் பிரியம் 26 பந்தில் 51 ரன்களை விளாசியுள்ளார்.
165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் இந்த முறையும் சரியான தொடக்க ஆட்டத்தை கொடுக்கவில்லை. முதலில் பேட்டிங் செய்த வாட்சன் 1 ரன்களை மட்டுமே எடுத்து அவுட் ஆகிவிட்டார். மிகவும் எதிர்பார்த்த ராயுடு 9 பந்தில் வெறும் 8 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
6 வது ஓவரில் களம் இறங்கிய தோனி நிதானமாக விளையாடினார். ஜடேஜா 35 பந்தில் 50 ரன்களை எடுத்து நல்ல ஒரு ஆட்டத்தை வெளிபடுதினாலும் அதன்பின்னர் அவுட் ஆகிவிட்டார். அதன்பின்னர் தோனி மிகவும் கடினமாக இரண்டு இரண்டு ரன்களை எடுத்தார்.
இருந்தாலும் சென்னை அணிக்காக கஷ்டப்பட்டு அவரது ஆட்டத்தை வெளிபடுத்தியுள்ளார் தோனி. அவரது உழைப்பு பயன் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்க்ஸ் இறுதிவரை போராடி 7 ரன்களை வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அதன்பின்னர் அளித்த பேட்டியில் தோனி சொன்னதை கேட்ட ரசிகர்கள் மிகவும் சோகத்தில் முழ்கினார்.. அப்படி என்ன சொன்னார் தெரியுமா?
என்னால் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்ய முடியவில்லை . அதுவும் எனக்கு தொண்டை வறண்டு போய்விட்டது ,அதுமட்டுமின்றி இருமலும் கூட.. இரண்டு இரண்டு ரன்களை எடுத்தது தான் காரணம். பௌலிங் செய்தபோது ரன்களை முடிந்த வரை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் அதுமட்டுமின்றி எக்ஸ்ட்ரா ரன்களை தவிர்க்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார்.
அவரது பதிலை கேட்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சோகத்தில் உள்ளனர்.