இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி-20 போட்டிகளில் நடந்து முடிந்துள்ளது. அதில் முதல் நான்கு போட்டிகளில் தல இரு போட்டிகளில் இரு அணிகளும் வென்றுள்ளது. இறுதி போட்டியில் யார் வெல்கிறாரோ அவர்களே கோப்பை வெல்ல முடியும் என்ற நிலை ஏற்பட்டது.
அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பௌலிங்கை தேர்வு செய்தனர். முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி அசத்தலாக விளையாடி 224 ரன்களை எடுத்தனர். அதன்பின்னர் பிறகு களம் இறங்கிய இங்கிலாந்து அணிக்கு பேட்டிங் தொடக்கம் ஆட்டம் அமையவில்லை.
இருந்தாலும் ஜோஸ் பட்லர் மற்றும் மலன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். எதிர்பாராத விதமாக ஜோஸ் பட்லர் மற்றும் மலன் ஆகிய இருவரும் ஆட்டம் இழந்ததால் இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல பல கேள்விகள் எழுந்தன. 20 ஓவர் முடிவில் வெறும் 188 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணியினர் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதையும் படியுங்க: பயிற்சியில் இணைந்த சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் சந்தோஷத்தில் ரசிகர்கள் ; யார் தெரியுமா?
இதனால் ஐந்து போட்டிகளில் மூன்று போட்டி வென்ற இந்தியா அணி டி-20கான தொடரை கைப்பற்றியது. இதனால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் இவர் ஒன்றுமே செய்யவில்லை ; நாசர் ஹுசைன்
இந்தியாவுக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்துள்ளது. அதனால் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் ;; இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் பென் ஸ்டோக்ஸ் சரியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அதுமட்டுமின்றி அவர் 5ஐந்து போட்டிகளில் வெறும் 4வது போட்டியில் மட்டுமே நல்ல ரன்களை எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டி-20 போட்டியில் 84 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
ஒருவேளை இரு ஓவரில் 20 ரன்கள் வேண்டும் என்ற நிலை இருந்தால் அப்பொழுது பென் ஸ்டோக்ஸ் சிறப்பான ஆட்டத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய ஆட்டத்தை உருவாக காரணமாக இருப்பர். அடுத்த நடக்க இருக்கின்ற மூன்று ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் ஆட்டத்தை இந்தியாவுக்கு எதிராக எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம் ; கூறியுள்ளார் நாசர் ஹுசைன்.