உலகக்கோப்பை போட்டியில் நடராஜன் விளையாடுவாரா? கோலி அதிரடி விளக்கம்

0

நம்ம தமிழகத்தை சேர்ந்தவர் நடராஜன் இவருக்கு கிரிக்கெட் அனுபவம் அவ்வளவு இல்லை என்றாலும் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சன்ரைசர் ஹைதராபாத் அணியில் இடம் பெற்றார். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபி நாட்டில் ஐபிஎல் போட்டியை நடத்த முடிவு செய்த பிசிசிஐ. அதனை சிறப்பாகவும் முடித்தனர்.

நடராஜன் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் மிகவும் சிறந்த முறையில் பௌலிங் செய்து பல விக்கெட்களை எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி இந்தியாவுக்கு புது யாக்கர் கிடைத்துவிட்டார் என்று சமூகவலைத்தளங்களில் அவரை புகழ்ந்து கொண்டே இருந்தனர்.

அவரது ஐபிஎல் போட்டியின் திறனை பார்த்த பிசிசிஐ , அவர் இந்தியா அணியில் சேர்த்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் விளையாட வைத்தனர். ஆஸ்திரேலிவுக்கு எதிரான போட்டியிலும் பல விக்கெட் எடுத்துள்ளார். அதனால் அவருக்கு விஜய் ஹசாரே போட்டியில் விளையாட வேண்டாம் என்றும் அவருக்கு ஓய்வு கொடுத்துள்ளனர் பிசிசிஐ.

இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் அவர் பிட்னெஸ் டெஸ்ட் பாஸ் பண்ணிவிட்டார். அதனால் இறுதி டி-20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டுமின்றி நடராஜன் நிச்சியமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் விளையாடுவார் என்று விராட் கோலி கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள் : இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இவர் இல்லையாம் ; சந்தோஷத்தில் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள்

உலகக்கோப்பை போட்டியில் நடராஜன் விளையாடுவாரா? கோலி அதிரடி விளக்கம்..!

நடராஜன் உலகக்கோப்பை போட்டியில் விளையாட வாய்ப்பு உள்ளதா என்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விராட் கோலி ; அவர் மிகவும் நல்ல ஒரு பௌலர். அதுமட்டுமின்றி அவருக்கு வருகின்ற ஒரு நாள் போட்டி மற்றும் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை வைத்து முடிவு செய்ய வேண்டும் என்றும் கோலி கூறியுள்ளார்.

ஒரு வருகின்ற ஐபிஎல் 2021 ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அவரது ஆட்டம் சரியாக இருந்தால் நிச்சியம் அவர் உலகக்கோப்பைக்கான போட்டியில் இடம் பெறுவார் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஒருவேளை அவர் உலகக்கோப்பைக்கான போட்டியில் இடம்பெற்றால் நிச்சியம் அது தமிழர்களுக்கு அது பெருமையாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here