இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி வருகின்ற 9ஆம் தேதி ஆரம்பிக்க உள்ளது. அதனால் ஐபிஎல் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். கடந்த ஆண்டு ஐக்கிய அரபு நாட்டில் நடந்ததால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கினார். ஏனென்றால் ஐபிஎல் என்றல் அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா போல இருக்கும்.
ஆனால் இந்த ஆண்டு இந்தியாவில் தான் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது. அதுமட்டுமின்றி முதலில் சில போட்டிகளுக்கு ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் கடினமான அணி என்றல் அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான்.
ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகளில் சரியான ஆட்டத்தை சிஎஸ்கே அணி வெளிப்படுத்தவில்லை. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு , கடந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் சென்னை அணி பல தோல்விகளை சந்தித்தது. இதனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழைய வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
ஐபிஎல் ஆரம்பித்த 13 ஆண்டுகளில் அதுவே முதல் முறை ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் ரசிகர்களும் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி நல்ல விளையாட்டை விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்த வீரர் கண்டிப்பாக விளையாட வேண்டும் ; கவுதம் கம்பிர் கூறியுள்ளார் … யார் அந்த வீரர்?
அதற்கு ஏற்ப இப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி , ஹரி ஷங்கர், இன்னும் சில சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டுள்ளனர். அதிலும் தல தோனி அடிக்கும் சிக்சர் விடியோக்கள் பல சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.
பயிற்சியில் இணைந்த சிஎஸ்கே அணியின் ஆல்-ரவுண்டர் சந்தோஷத்தில் ரசிகர்கள் ; யார் தெரியுமா?
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் -ரவுண்டர் வீரரான பிராவோ சென்னை வந்துள்ளதார். இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான ஆல்-ரவுண்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இவர் கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் காயம் காரணமாக ஐபிஎல் 2020 போட்டிகளில் நடக்கும் பாதியிலேயே அவர் நாடு திரும்பிவிட்டார்.
அதற்கு அவர் சென்னை ரசிகர்களுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு விடியோவை பகிர்ந்துள்ளார். இந்த ஆண்டு சிறப்பான ஆல்-ரவுண்டராக இருப்பர் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றன. ஏனென்றால் சில ஐபிஎல் சீசன்களில் பிராவோ அதிக விக்கெட்டை எடுத்துள்ளார்.