அஸ்வினுக்கு பதிலாக இவர் அணியில் இருக்க வேண்டும் ; இவர் தான் சரியான இந்திய வீரர் ; முன்னாள் வீரர் அதிரடி பேட்டி ;

0

இந்திய அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக இவர் தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா.

சமீபத்தில் நடந்த முடிந்த தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் தோல்வி பெற்று 3 -0 என்ற கணக்கில் தென்னாபிரிக்கா அணி முன்னிலையில் இருந்த காரணத்தால் தொடரை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி, இந்திய அணியை வாஷ்அவுட் செய்ததுள்ளது தென்னாபிரிக்கா அணி.

இதனை பற்றிய பேச்சு தினந்தோறும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஆமாம்.. ஏனென்றால் இந்திய கிரிக்கெட் அணிக்கு இப்படி நடந்ததே இல்லை. அதனால் இந்திய அணியின் மோசமான தோல்வியை பற்றி பல வீரர்களை அவரவர் கருத்துக்களை தெரிவித்து கொண்டே வருகின்றனர். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா பேட்டி அளித்தார்.

இந்திய அணியை பற்றி பேசிய அவர் ; நம்ம இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஒன்னும் அளவிற்கு இல்லை. அஸ்வின் கடந்த மூன்று ஒருநாள் போட்டியிலும் விளையாடி ஒரு விக்கெட்டையும், யூஸ்வேந்திர சஹால் இரு விக்கெட்டை மட்டுமே கையாற்றியுள்ளனர். இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்களால் சரியாக விக்கெட் எடுக்க முடியவில்லை என்றால் நிச்சியமாக யோசிக்க வேண்டும்.

அதே நேரத்தில் ஜெயந்த் யாதவ் இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான வீரர் இல்லை, அதனால் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜெயந்த் யாதவ் ஆகிய இருவரும் ஒருநாள் போட்டிக்கான வீரர்கள் இல்லை. இந்த நேரத்தில் இந்திய கிரிக்கெட் அணி ரவீந்திர ஜடேஜாவை மிஸ் செய்கிறது. அதே நேரத்தில் குல்தீப் யாதவ் பற்றி யோசிக்க வேண்டும் அல்லது இரு சுழல் பந்து வீச்சாளர்கள் இந்திய அணிக்கு நிச்சியமாக தேவைப்படுகின்றன.

அதுமட்டுமின்றி, குறிப்பாக மிடில் ஆர்டரில் விக்கெட்டை கைப்பற்றும் வீரர்கள் தேவை என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெல்லாமல் போனதற்கு கே.எல்.ராகுல் கேப்டன்ஷி தான் என்று பல ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் மோசமான தோல்விக்கு என்ன காரணமாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்….!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here