இந்திய அணியின் நட்சத்திர பவுலராக மாறிவிட்டார் ; இனிமேல் வலுவான பவுலிங் இந்திய அணியில் இருக்கும் ; பாரத் அருண் பேட்டி ; முழு விவரம் இதோ ;

மீண்டும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார், அதனால் நிச்சியமாக இந்திய அணிக்கு சரியான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் பாரத் அருண்.

வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் விளையாட உள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்துள்ள தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக போட்டியில் மோசமான தோல்வியை சந்தித்து வந்தனர்.

அதனால் இந்த முறை ஆவது இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணியின் பட்டியலை வெளியிட்டது பிசிசிஐ.

அதில் நீண்ட நாட்கள் கழித்து இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார் சுழல் பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளார். சமீப காலமாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வந்துள்ளார் குல்தீப். தோனி ஓய்வு பெற்ற பிறகு இவருக்காக வாய்ப்பே கிடைப்பது இல்லை.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் பவுலிங் பயிற்சியாளரான பாரத் அருண் அளித்த பேட்டியில் ; வ்ரிஸ்ட் சுழல் பந்து வீச்சாளர் இந்திய அணியில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். இப்பொழுதெல்லாம் போட்டி என்ற நிலை வரும்போது பல ஆலோசனை நடைபெறும். அதுவும் இன்னும் சில மாதங்களில் உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.

அதுதான் அனைவரின் மனதிலும் இருக்கும். அதற்கான வீரர்களை தேர்வு செய்ய ஒருநாள் போட்டி தான் சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார் பாரத் அருண். மேலும் குல்தீப் யாதவ் பற்றி பேசிய அருண் ; வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரவி பிஷோனி மற்றும் குல்தீப் யாதவ் போன்ற வீரர்களை அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அதுவும் குல்தீப் யாதவ் நீண்ட நாட்கள் கழித்து அணியில் இடம்பெற்றது, சந்தோசமாக உள்ளது. குல்தீப் பல தவறுகளை செய்துள்ளார், ஆனால் அவருக்கு அதிக திறமை உள்ளது. எனக்கு தெரிந்து அவர் தான் இந்திய அணியின் முக்கியமான பவுலர்களாக வலம் வர போகிறார். அவர் மீண்டும் இந்திய அணியில் வந்தது சிறப்பாக இருக்கிறது.

ஆனால், அதில் இருந்து பல பாடங்களை கற்றுக்கொண்டு சிறப்பாக விளையாடுவார் என்று கூறியுள்ளார் பாரத் அருண். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் களமிறங்குவாரா ??? குல்தீப் யாதவ் …?