வருகின்ற பிப்ரவரி 6ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிக்கு இடையேயான டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் இந்திய அணியை ரோஹித் ஷர்மாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியை பொல்லார்ட்-ம் தலைமை தாங்கி வழிநடத்த உள்ளனர்.
இரு தினங்களுக்கு முன்பு தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட போகும், 18 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்துள்ளது பிசிசிஐ. அதில் சில எதிர்பார்த்த வீரர்களும் எதிர்பாராத வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர். ஆமாம் ..! இந்த முறையும் ஹார்டிக் பாண்டியாவும் இடம்பெறவில்லை.
இந்திய அணியின் முக்கியமான ஆல் -ரவுண்டராக வலம் வந்தார் ஹார்டிக் பாண்டிய. ;ஆனால் அவருக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பிறகு அவரால் சரியாக பவுலிங் செய்ய முடியவில்லை. பின்னர் பேட்டிங் செய்தாலும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்பது தான் உண்மை.
இருப்பினும் சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ள ஐசிசி உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியில் இடம்பெற்றார் ஹார்டிக். அது கிரிக்கெட் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. பின்னர், அதன்பிறகு அவரே (ஹார்டிக் பாண்டிய) நான் சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும்.
அதற்கான பயிற்சிகளை செய்துகொண்டே வருகிறேன். அதனால் இன்னும் சில போட்டிகளில் என்னை அணியில் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய. இதனை தொடர்ந்து சமீபத்தில் ஹார்டிக் பாண்டிய அளித்த பேட்டியில் ; என்னுடைய ஒரே பிளான் வருகின்ற உலகக்கோப்பை போட்டியில் விளையாடி வெல்ல வேண்டும் என்பது தான்.
நான் இப்பொழுது செய்யும் பயிற்சிகள், பிளான் அனைத்தும் உலகக்கோப்பை போட்டியை நினைத்து தான். இந்தியாவுக்காக உலகக்கோப்பை வெல்ல வேண்டும், அது தான் எனக்கு மிகப்பெரிய சந்தோசம். ஐபிஎல் போட்டிகள் நிச்சயமாக உலகக்கோப்பை போட்டியில் விளையாட தயாராகும் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொள்ள உதவும்.
அதனை விட நான் எந்த அளவுக்கு என்னுடையய கடினமான உழைப்பை இந்திய அணியில் பயன்படுத்த போகிறேன் என்பதில் தான் உள்ளது. அதற்காக என்னை நானே முன்னேறிக்கொண்டு வருகிறேன், அதனால் எனக்கு சில நாட்கள் தேவைப்படுகிறது. அதுவும் என்னுடைய குடும்பத்துடன் இருக்கவும் சில நாட்கள் வேண்டும்.
ஏனென்றால் இப்பொழுது கொரோனா என்பதால் மைதானத்தை அடுத்து ஹோட்டல் ரூம், அதை விட்டால் மைதானம் என்ற அடிப்படையில் விளையாடி கொண்டே வருகிறோம். அதனால் குடும்பத்துடன் சில நாட்கள் இருக்கும்போது நிம்மதியாக இருக்கும் என்று கூறியுள்ளார் ஹார்டிக் பாண்டிய….!