கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முக்கியமான பவுளர் புவனேஸ்வர் குமார் காயம் காரணமாக இந்திய திரும்பிவிட்டார். அதனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் இணைந்து விளையாடவில்லை.
இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டியில் சிறப்பான முறை பவுலிங் செய்துள்ளார் புவனேஸ்வர் குமார். இறுதியாக நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் மிகவும் குறைவான ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டையும் எடுத்துள்ளனர். இந்திய அணியும் மிகமுக்கியமான பவுளர்களுள் இவரும் ஒருவர்.
அதனால் இந்திய அணியின் மிகமுக்கியமான பவுளராக உள்ளார் புவனேஸ்வர் குமார். எனக்கு அவரை நன்கு தெரியும், ஐபிஎல் போட்டியின் போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் அவருடன் இணைந்து வேலை செய்துள்ளேன். கடந்த இரு ஆண்டுகளாக அவர் மிகவும் கஷ்டப்பட்டார், அவருக்கு கிடைத்த அனைத்து வாய்ப்பையும் அவர் சரியாக பயன்படுத்தி உள்ளார் என்று கூறியுள்ளார் வி.வி.எஸ். லட்சுமன்.
புவனேஸ்வர் குமார் கஷ்டப்பட்டு வேலை செய்து மற்றும் அவரது நேரத்தை செலவு செய்ததற்கு NCA சரியான பரிசு கொடுத்துள்ளது. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் புவனேஸ்வர் குமார் சிறப்பான முறையில் அதிக விக்கெட்டை எடுத்துள்ளார். அதனால் நிச்சியமாக நவம்பர் மாதத்தில் நடக்க போகின்ற டி-20 உலககோப்பையில் சரியான வீரராக இவர் இருப்பர். அதுமட்டுமின்றி புவனேஸ்வரின் காம்பேக் இந்திய கிரிக்கெட் அணிக்கு பிளஸ் ஆக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.லட்சுமன்.