இந்தியாவில் ஐபிஎல் 2021 போட்டிகள் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் உள்ளனர். ஏனென்றால் இன்னும் குறைவான நாட்களே உள்ளன. அதனால் ஐபிஎல் வீரர்கள் அனைவரும் அவரவர் அணியில் இணைந்து தீவிரமான பயிற்சி செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் இறுதி நேரத்தில் சிஎஸ்கே அணியை விட்டு இந்தியா திரும்பினர். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சரியான பேட்டிங் அணி கிடைக்கவில்லை. அதனால் சிஎஸ்கே அணியில் பல மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் 2020ஆம் ஆண்டு தான் முதல் முறை சிஎஸ்கே அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக சிஎஸ்கே அணி கோப்பை வெல்ல வேண்டும் என்று நினைத்தால் மார்ச் தொடக்கத்தில் இருந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். அதனால் இந்த ஆண்டு நிச்சியமாக சிஎஸ்கே அணி காம்-பேக் கொடுக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
இந்த ஆண்டு சிஎஸ்கே அணியில் இருந்து ஜோஷ் ஹசில்வுட் திடிரென்று ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகுவதாக கூறினார். அதனால் அவருக்கு பதிலாக யார் அணியில் இடம்பெருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர்.
சமீபத்தில் ஆஸ்திரேலியா அணியின் பில்லி ஸ்டான்லெக் மற்றும் இங்கிலாந்து அணியின் வீரர் டோப்லே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற விருப்பம் இருந்தால் வரலாம் என்று சிஎஸ்கே அணியின் உரிமையாளர் கூறியுள்ளார். ஆனால் இந்த இருவரும் இந்த வாய்ப்பை நிராகரித்துள்ளனர். ஏன் வேண்டாம் என்று கேட்டதற்கு .. இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்ததால் என்னால் ஐபிஎல் போட்டில் பங்கேற்க முடியாது என்று இரு வீரர்களும் கூறியுள்ளனர். அதனால் இப்பொழுது வேறு எந்த வீரர் இடம்பெருவார் என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறது சிஎஸ்கே அணி.
உலக கிரிக்கெட் போட்டிகளில் மிகவும் பிரபலமான போட்டி என்றால் ஐபிஎல் போட்டி தான். அதில் கிடைக்கும் வாய்ப்பை வைத்து பல கிரிக்கெட் வீரர்கள் அவர்களது வாழ்க்கையில் பல சாதனைகளை செய்துள்ளார். ஐபிஎல் வாய்ப்பை தவற விட்டால் , சில கிரிக்கெட் வீரர்கள் வாழ்க்கை கேள்விக்குறிதான்.