இந்தியாவில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்க உள்ளன. அதனால் கிரிக்கட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். அதுமட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் அவரவர் அணியில் இணைந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பல பிரச்னையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டிகளில் விளையாடினார். ஏனென்றால் போட்டிகள் துவங்கும் முன் தீடிரென்று ரெய்னா ஐபிஎல் 2020 விளையாடாமல் இந்தியாவுக்கு திரும்பினார். அதனால் ரெய்னா இடத்தை புர்த்தி செய்ய சரியான ஆட்கள் இல்லாததால்.
சிஎஸ்கே அணி பல தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சென்னை சூப்பர் அணியால் ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறிவிட்டது. அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் அதுவே முதல் முறை ஐபிஎல் போட்டியில் ப்ளே -ஆஃப் சுற்றுக்குள் நுழையமால் வெளியேறியது.
அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் கோப்பை வெல்ல வேண்டும் என்று மார்ச் தொடக்கத்தில் இருந்து பயிற்சி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2021 ஏலத்தில் ராபின் உத்தப்பா, மெயின் அலி, கிருஷ்ணப்ப கவுதம் போன்ற வீரர்கள் சென்னை அணியில் புதிதாக இடம் பெற்றுள்ளனர்.
இப்பொழுது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது… 2008ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் தோனி தான் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா தான் என்று நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் 2020, சிஎஸ்கே அணியில் இருந்து சில முக்கியமான பிரச்சனை காரணமாக ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் இந்திய திரும்பிவிட்டார். அதனால் 2020ஆம் ஐபிஎல் போட்டியில் தோனிக்கு துணை கேப்டனாக ஜடேஜா இருந்துள்ளார்.
இந்த ஆண்டு யார் துணை கேப்டன் என்ற கேள்வி எழுந்துள்ளது.. கடந்த ஆண்டு ரெய்னா இல்லாத காரணத்தால் ஜடேஜா இருந்தார். அனால் இப்பொழுது ரெய்னா வந்து விட்டதால் , அவருக்கே மீண்டும் துணை கேப்டன் பொறுப்பு கொடுக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கு பதிலளித்த சிஎஸ்கே அணியின் உரிமையாளர் , நங்கள் இன்னும் அதனை முடிவு செய்யவில்லை என்றும் அதனை கூடிய விரைவில் நங்கள் அதனை அறிவிப்போம் என்று கூறியுள்ளனர். சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது.