இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டி வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் உள்ளூர் போட்டிகளில் மிகவும் பிரபலமான ஒரு போட்டி என்றால் அது ஐபிஎல் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
அதனால் எல்லா ஐபிஎல் வீரர்களும் அவரவர் அணியில் இணைந்து பயிற்சியை ஆரம்பித்துள்ளனர். இந்த ஆண்டு பல புதிய விதிமுறைகளை பிசிசிஐ அறிமுகம் செய்துள்ளனர். அதனால் நிச்சியமாக விறுவிறுப்பான போட்டிகள் நிச்சியமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
கடந்த மாதம் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகளில் விராட் கோலியின் பேட்டிங் மிகவும் அற்புதமாக இருந்தது. அதனால் நான் ஐபிஎல் போட்டியிலும் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக விளையாடுவேன் என்று சொல்லிருந்தார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கு கிடைத்த புதிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் தான் படிக்கல் , அவரது அதிரடியான ஆட்டத்தால் 15 போட்டிகளில் விளையாடி 473 ரன்களை எடுத்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளில் இவர் தான் அதிக ரன்களை எடுத்துள்ளார்.
சிறப்பான ஒபெநிங் பேட்ஸ்மேனாக இருந்த படிக்கல் , இந்த ஆண்டும் கோலியுடன் இணைந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம் என்று நினைத்த போது , சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனால் அவரை சில நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் கூறியுள்ளனர்.
அதனால் அவரால் முதல் போட்டியில் விளையாடுவது கடினம் என்று ஆர்.சி.பி. கூறியுள்ளது. அதனால் இப்பொழுது அவருக்கு பதிலாக யார் போட்டியில் இடம்பெறுவார் ?? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஓப்பனிங் பேட்டிங் செய்வார்களோ??
வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் மோத உள்ளன. அதனால் நிச்சியமாக விறுவிறுப்பான ஆட்டம் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.