டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆக போகும் அதிரடி மன்னன் ; இனி இந்திய அணிக்கு தோல்வியே இல்லை ;

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த இரு ஒருநாள் போட்டிகளில் 2 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் இருக்கிறது.

அதுமட்டுமன்றி, நாளை நடைபெற உள்ள இறுதியில் போட்டியில் ஆவது இலங்க அணி ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா இல்லையா ?

இந்த மாதம் நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடரிலும், பிப்ரவரி மாதத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நான்கு டெஸ்ட்போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிக்கான தொடர் நடைபெற உள்ளது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

அதுமட்டுமின்றி, நேற்று இரவு தான் நியூஸிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டிகளில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியின் விவரத்தையும், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட போகும் வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது பிசிசிஐ.

சரியான நேரத்தில் அதிரடி மன்னனை அறிவித்துள்ளது பிசிசிஐ :

இந்திய கிரிக்கெட் அணியின் கடந்த ஆண்டு அறிமுகம் ஆன சூர்யகுமார் யாதவின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்து ஆசிய கோப்பை, டி-20 உலக்கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் சதம் அடித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்.

இப்படிப்பட்ட திறமையான பேட்ஸ்மேன் டெஸ்ட் போட்டிக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றால் அதிக ரன்களை அடிக்க உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதனை நிறைவேற்றும் வகையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டிக்கான தொடரில் சூர்யகுமார் இடம்பெற்றுள்ளார். அவருக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கொடுக்கப்படுமா ? இல்லையா ?

அதுமட்டுமின்றி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடர் போட்டி இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஆமாம், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திலும், இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றனர். அதனால் சிறப்பாக விளையாடும்பட்சத்தில் இந்திய கிரிக்கெட் அணி இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் விவரம்:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), சுப்மன் கில், புஜாரா, விராட்கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், பாரத், இஷான் கிஷான், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமத் ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனட்கட், சூர்யகுமார் யாதவ்.