பா…! இதுதான் உண்மையான இந்திய அணி ; இப்படிப்பட்ட இந்திய கிரிக்கெட் அணியை தான் அனைவரும் விரும்புகின்றனர் ; ரசிகர்கள் மிகழ்ச்சி ;

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிக்கான தொடர் நடைபெற்று முடிந்துள்ளது. அதில் இந்திய 2- 1 என்ற கணக்கில் டி-20 போட்டிக்கான தொடரை இந்திய கிரிக்கெட் அணி வென்றுள்ளது.

அதனை தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் போட்டிக்கான தொடரில் 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது இந்திய. நாளை மதியம் 1:30 மணியளவில் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்ட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷனாக தலைமையிலான இலங்கை அணியும் மோத உள்ளனர்.

நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் ஆவது இலங்கை அணி ஆறுதல் வெற்றியை கைப்பற்றுமா ? அல்லது இந்திய கிரிக்கெட் அணி வாஷ்-அவுட் செய்ய போகிறதா ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சமீபத்தில் இந்திய கிரிக்கெட் அணியில் நடக்கும் முக்கியமான மாற்றங்கள் :

சமீபத்தில் நடந்து முடிந்த டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் பங்களிப்பு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அரையிறுதி வரை முன்னேறிய இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியாமல் தவித்தது. 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது இங்கிலாந்து. அதனால் இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான விமர்சனங்கள் எழுந்து கொண்டே வருகிறது.

அதுமட்டுமின்றி, அனுபவம் மற்றும் மூத்த வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க கூடாது. இனிவரும் போட்டிகளில் இளம் வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை நிறைவேற்றும் வகையில் தான் கடந்த இரு டி-20 தொடரிலும் மூத்த வீரர்களை காட்டிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது.

வருகின்ற ஜனவரி 18ஆம் தேதி முதல் இந்திய மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான தொடர் நடைபெற உள்ளது. அதில் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்த ஆண்டு 2024ல் நடைபெற உள்ள டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் அதிகப்படியான இளம் வீரர்களுக்கு தான் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நியூஸிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் விவரம் (டி-20) :

ஹர்டிக் பாண்டிய (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபதி, ஜிடேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், உம்ரன் மலிக், சிவம் மாவி, பிருத்வி ஷாவ், முகேஷ் குமார்.