இந்திய அணியில் இவர் 150கிமீ வேகத்தில் பவுலிங் செய்கிறார் ; அதனால் t20 WC போட்டியில் இடம்பெற வேண்டும் ; கிளென் மெக்ராத் வீரர் ;

0

வருகின்ற 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த முறை இலங்கையில் நடைபெற வேண்டிய நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற போகின்றது. இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர்.

இதில் “ஏ” பிரிவு மற்றும் “பி” பிரிவு என்று இரு பிரிவுகள் உள்ளது. இந்திய, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானித்தான் மற்றும் பங்களாதேஷ் போன்ற ஐந்து அணிகள் உறுதியான நிலையில் 6வது அணியாக இடம்பெற சில அணிகளுக்கு இடையே தகுதி சுற்றுகள் நடைபெற உள்ளது.

அதில் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஹாங் காங் மற்றும் சிங்கப்பூர் போன்ற அணிகளுக்கு இடையே பலத்த மோதல் ஏற்பட உள்ளது. இதில் ஒரு அணிதான் 6வதாக ஆசிய கோப்பை போட்டியில் இணைய போகிறது. அதனை அடுத்து டி-20 உலகக்கோப்பை போட்டிகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது.

அதனால் ஆசிய கோப்பையில் பங்கேற்கும் அணிதான் உலகக்கோப்பை போட்டியிலும் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாத நேரத்தில் ஒரு சில மாற்றங்கள் மட்டுமே நடக்கும் என்பதில் சந்தேகமில்லை. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் வீரரான உம்ரன் மலிக் அதிவேகமாக பவுலிங் செய்து வருகிறார்.

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற அயர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியின் பொது இந்திய அணியில் அறிமுகம் ஆனார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு வாய்ப்பு பெரியளவில் கொடுக்கப்படவில்லை. ஏனென்றால், அவரது பவுலிங் வேகமாக மட்டுமே உள்ளது. அதுமட்டுமின்றி ஓவரில் அதிக ரன்களை கொடுத்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இதனை பற்றி பேசிய ரோஹித் சர்மா ; ” உம்ரன் மலிக் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். ஆனால் வெறும் வேகம் மட்டும் அணிக்கு தேவைப்படாது. வேகத்துடன் ஸ்விங் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார் ரோஹித்.”

இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அற்புதமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான க்ளென் மெக்ராத் கூறுகையில் ; “உம்ரன் மலிக் வேகம் எப்பொழுது தனித்துவமான ஒன்று. எந்த ஒரு வீரருக்கும் 150 கிமீ வேகத்தில் பவுலிங் செய் என்று சொல்லிக்கொடுக்க முடியாது.”

“ஒரு போட்டியில் ஆளுமையை பவுலர்கள் கையில் எடுக்க தவறி வருகின்றனர். 150கிமீ வேகத்தில் ஒருவர் பவுலிங் செய்கிறார் என்றால் அது அரிதான விஷயம் தான். ஆனால் அந்த வேகத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தால் தான் நிச்சியமாக அதனை கட்டுப்படுத்த முடியும். உம்ரன் மாலிக் விளையாடியதை நான் பெரிய அளவில் பார்த்தது இல்லை. ஆனால் அவரது வேகத்தில் சில சுவாரஷியம் உள்ளது என்று கூறியுள்ளார் க்ளென் மெக்ராத்.”

நிச்சியமாக அனுபவம் இல்லாத உம்ரன் மலிக் வருகின்ற டி-20 உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பு என்பது மிகவும் குறைவு தான். டி-20 உலகக்கோப்பை போட்டியில் உம்ரன் மலிக் இந்திய அணிக்கு தேவையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here