இந்த பையனை பார்க்கும்போது டிவில்லியர்ஸ் போல இருக்கிறது ; T20 WC போட்டியில் இந்திய அணியின் முக்கியமான வீரர் ; ரிக்கி பாண்டிங் உறுதி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பை போட்டிகள் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து தென்னப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது.

அதனை அடுத்து தான் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை 2022 இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆஸ்திரேலியாவில் நடைபெற போகிறது. அதற்கு அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியிலும் ஆலோசனையிலும் உள்ளனர்.

ஆனால் இந்திய அணிக்கு அந்த பிரச்சனை இருக்காது. ஏனென்றால், இன்னும் சில நாட்களுக்கு பிறகு ஆசிய கோப்பை நடைபெற உள்ளது. அதனால் அதில் பங்கேற்க போகும் வீரர்கள் தான் அதிகபட்சமாக உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்திய அணியின் நம்பிக்கையான மிடில் ஆர்டர் :

இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் எப்படி இருந்தாலும் மிடில் ஆர்டர் எப்பொழுதும் வலுவாக உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அதிலும் டி-20 போட்டிகளில் சூரியகுமார் யாதவின் அதிரடியான ஆட்டம் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியின்போது இந்திய அணியில் அறிமுகம் ஆனார்.

அதில் இருந்து சிறப்பாக விளையாடி வரும் சூரியகுமார் யாதவ் அசைக்க முடியாத மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக திகழ்கிறார் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் கடந்த ஜூலை மாதத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் அடித்துள்ளார்.

அதனால் மற்ற வீரர்களை காட்டிலும் சூரியகுமார் யாதவின் விளையாட்டு இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இதனை பற்றி பேசிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான ரிக்கி பாண்டிங் கூறுகையில் ; ” விராட்கோலி எப்பொழுது போலவே மூன்றாவதாக பேட்டிங் செய்யட்டும்.”

“ஆனால் சூரியகுமார் யதாவுக்கு அப்படி இல்லை 1, 2 அல்லது 4வதாக கூட களமிறங்க வாய்ப்பு உள்ளது. சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரராக கூட களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஆனால் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்து இறுதிவரை போட்டியை கொண்டு செல்லும் திறன் இவரிடம் உள்ளது.”

“இந்திய அணியின் முதல் நான்கு இடங்கள் சரியாக உள்ளது. அதனால் சூரியகுமார் யாதவ் நான்காவதாக பேட்டிங் செய்யட்டும், அது தான் சரியாக இருக்கும். அதுமட்டுமின்றி சூரியகுமார் யாதவ் எந்த பக்கம் வேண்டுமானாலும் (360) அதிரடியாக விளையாட கூடிய வீரர் தான் டிவில்லியர்ஸ் போலவே.”

“ஏனென்றால் டிவில்லியர்ஸ் எல்ல பக்கமும் சிறப்பாக அதிரடியாக பேட்டிங் செய்ய கூடிய வீரர் தான். லெக் சைட் பவுலிங் செய்தால் பிளிக் ஷாட் அடிக்கிறார், அதுமட்டுமின்றி வேகப்பந்து வீச்சாளர்களின் பவுலிங் ஆக இருக்கட்டும், சுழல் பந்து பவுலிங்கிலும் சிறப்பாக விளையாடி வருகிறார் சூரியகுமார் யாதவ் என்று பெருமையுடன் பேசியுள்ளார் ரிக்கி பாண்டிங்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here