பிராவோ – சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு செய்தியை கூறியுள்ளார்…. மனம் திறந்த பிராவோ … சோகத்தில் ரசிகர்கள்….!!

0

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டிகள் தொடங்கி 39 டி20 லீக் போட்டிகளில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. சிஎஸ்கே ரசிகர்களுக்கு தொடர்ந்து சோகமும் மற்றும் அதிர்ச்சியும் கிடைத்து கொண்ட இருக்கின்றன.

இந்த சீசன் ஐபிஎல் 2020யில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி… 10 போட்டிகளில் விளையாடி வெறும் 3 போட்டிகளில் மட்டுமே வெற்றியை கைப்பற்றி உள்ளது. இந்த மாதிரியான மோசமான நிலையில் சிஎஸ்கே அணி இருப்பது முதல்முறை, இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஐபிஎல் வீரர்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

தொடர் தோல்வியால் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியளில் 8வது இடத்தில் உள்ளது சிஎஸ்கே. 11 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். இதனை கண்ட ரசிகர்கள் மனம் உடைந்து வேதனையில் உள்ளனர்.

சிஎஸ்கேவுக்கு ஐபிஎல் 2020 சரியாக அமையவில்லை !!

ஐபிஎல் பேச்சு ஆரம்பிக்கும் போது சிஎஸ்கே அணியின் சூழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இந்த ஆண்டு போட்டிகளில் விளையாட வில்லை என்று கூறியுள்ளார். இருந்தாலும் சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு நாட்டுக்கு சென்று ஐபிஎல்2020 டி20 போட்டியில் விளையாட சென்றனர். ஆனால் சில குடும்ப பிரச்சனை காரணமாக சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரெய்னா இந்தியாவுக்கு திரும்பினர். அதன்பின்னர் அவரும் இந்த ஆண்டு போட்டிகளில் விளையாட மாட்டேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு பதிவை பதிவு செய்துள்ளர்.

தோனியின் அணுகுமுறை:

ரெய்னா மற்றும் ஹர்பஜன் இல்லை என்றாலும் அணியை சிறப்பாக வழி நடத்த பல யுக்திகளை கையாண்ட தோனிக்கு தோல்வி தான் கிடைத்தது. ஏனென்றால் ரெய்னா இல்லாமல் போனதால் அந்த இடத்தை புர்த்தி செய்ய பல வழிகளை கையாண்ட தோனிக்கு தோல்வியே. ஒருவேளை ரெய்னா மற்றும் ஹர்பஜன் இருந்திருந்தால் இந்த மாதிரியான மோசமான விளைவுகள் சிஎஸ்கே அணி சந்தித்திருக்க தேவை இல்லை.

பிராவோ – சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு செய்தியை கூறியுள்ளார்…. மனம் திறந்த பிராவோ … சோகத்தில் ரசிகர்கள்….!!

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ப்ரோவுக்கு அடிப்பட்டதால் அந்த போட்டியின் நடுவில் அவர் வெளியேற்றப்பட்டார். அதன்பின்னர் அவருக்கு பதிலாக ருதுராஜ் போட்டியில் விளையாடினார். அந்த காயம் ஒன்று பெரிதல்ல என்று நினைத்த போது அவர் இனி சிஎஸ்கே அணியில் இந்த சீசன் 2020 லீக் போட்டியில் விளையாட மாட்டார் என்று சிஎஸ்கே அணியில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

அவர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டுக்கே திரும்ப போவதாகவும் செய்திகள் வெளியானது. இதனை கேட்ட ரசிகர்கள் மிகவும் சோகத்தில் ஆழ்த்துள்ளார். அதுமட்டுமின்றி சிஎஸ்கே ஆல்- ரவுண்டர் சிஎஸ்கே ரசிகர்களுக்கு ஒரு செய்தியை கூறியுள்ளார்.

பிராவோ;; சிஎஸ்கே அணியின் தீவிரமான ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். நாங்க கஷ்டப்பட்டு தான் விளையாடினோம். ஆனால் அதன்பலன் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி நாங்கள் நினைத்த மாதிரியான சூழ்நிலை அமையவில்லை. சிஎஸ்கி ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள்…. கண்டிப்பாக சிஎஸ்கே அணி மீண்டும் நல்ல ஒரு சிறந்த அணியாக வருவோம் என்று மனம் உருகும் படி பேசியுள்ளார்.

வீடியோ;;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here