சிஎஸ்கே வீரர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகினார்….ரசிகர்கள் அதிர்ச்சி..! யார் அந்த வீரர்??

0

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி யாராலும் மறக்க முடியாத அளவுக்கு பல பிரச்சனைகளை சந்தித்து இப்பொழுது ஐக்கிய அரபு நாட்டில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த செப்டெம்பர் 19ஆம் தேதி ஆரம்பித்த ஐபிஎல் போட்டி , இதுவரை 38 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை நடந்த ஐபிஎல் சீசன்களில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழைந்து விடும். ஆனால் இந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டியில் சந்தேகம் தான். ஏனென்றால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதனால் இனிவரும் போட்டிகளில் வெற்றி பெற்றால் வாய்ப்பு சிறிதளவு இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஐபிஎல் 2020யில் சிஎஸ்கே அணிக்கும் வீரர்களுக்கும் ராசி இல்லை என்றே சொல்லலாம். ஏனென்றால் ரெய்னா அவரது குடும்ப பிரச்சனை காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் 2020யில் இருந்து விலகினார். அதன்பிறகு ஹர்பஜன் ஐபிஎல் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போது அவரும் இந்த ஆண்டு விளையாட முடியாது என்று கூறியுள்ளார்.

அதனால் கேப்டன் தோனி புதிய புதிய வீரர்களை வைத்து பல யுக்திகளை செய்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை. இந்த தொடர் தோல்வியால் சிஎஸ்கே ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.

சிஎஸ்கே வீரர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகினார்….ரசிகர்கள் அதிர்ச்சி..! யார் அந்த வீரர்??

டெல்லி எதிரான போட்டியில் , டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 179 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் முடித்தனர் சிஎஸ்கே வீரர்கள். 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய டெல்லி வீரர்கள் ஆரம்பத்தில் சோதப்பினாலும் அதன்பின்னர் வந்த வீரர் மற்றும் தவான் நல்ல ஒரு ஆட்டத்தை காட்டியுள்ளார்.

இறுதி ஓவரில் 18 ரன்கள் எடுத்த வெற்றி என்று இருந்த டெல்லி வீரர். இறுதி ஓவர் பிராவோ தான் பந்து வீசி இருக்க வேண்டும். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதானால் அவரால் அந்த போட்டியை தொடர முடியாமல் போய்விட்டது. ஆனால் அவர் அடுத்த போட்டியில் விளையாடுவார் என்று கூறிய ஸ்டீபன் பிளெமிங்.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடவில்லை. சமீபத்தில் ஒரு செய்தி ஒன்று வெளியானது::: ப்ராவோவுக்கு காயம் ஏற்பட்டதால் இனி இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனை கேட்ட ரசிகர்கள் மிகவும் சோகத்தில் உள்ளனர். இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேட் லக் என்றே சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here