சிஎஸ்கே அணியில் இவரை போல் வேறு யாருமில்லை ; ஆல் ரவுண்டர் ப்ராவோ பேட்டி ; முழு விவரம் இதோ ;

0

ஐபிஎல் 2022 போட்டிக்கான பேச்சு சூடுபிடிக்க தொடங்கியுள்ளது தான் உண்மை. ஏனென்றால் அடுத்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022யில் புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடத்த போவதாக பிசிசிஐ கூறியுள்ளார்.

அதில் “அஹமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரு அணிகள் தான், என்பதை சமீபத்தில் தான் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதனால் புதிய அணிகளை தவிர்த்து மீதமுள்ள 8 அணிகளும் அதிகபட்சமாக தலா 4 வீரர்களை தக்கவைத்து கொள்ள முடியும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி போன்ற நான்கு வீரர்களை தக்கவைத்துள்ளனர். ஆனால் ஆல் -ரவுண்டரான ப்ராவோ தக்கவைக்கப்படாதது சிஎஸ்கே ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை.

சிஎஸ்கே அணியை பற்றிய ப்ராவோ ; தோனி பற்றி எந்த ரகசியமும் இல்லை, அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடக்கத்தில் இருந்து கோட்டை மாதிரி கட்டியுள்ளார். ஒரு வீரராக நங்கள் அவருடன் விளையாடியது மிகவும் பெருமையாக தான் உள்ளது.

அவருடைய கேப்டன்ஷி கீழ் விளையாடியது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது என்று கூறியுள்ளார் ப்ராவோ. ஏலத்தில் சிஎஸ்கே அணி ப்ராவோ-வை அணியில் எடுக்குமா ?? இல்லையா ?? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும். ஆனால் முக்கியமான நேரத்தில் சரியாக விளையாடி சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்துள்ளார் ப்ராவோ.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, கடந்த ஆண்டு தோனி சர்வதேச ஓய்வை அறிவித்தார். அதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கினர்.

இப்பொழுது தோனி எப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் நிச்சயமாக அணியில் இருப்பார் என்பது எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here