அன்று தோனி அப்படி சொன்னதால் தான் , அவரது பெயர் இப்பொழுது உலகம் முழுவதும் உள்ளது ; பும்ரா விளக்கம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆமாம் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 416 ரன்களை அடித்தனர்.

அதில் ரவீந்தர ஜடேஜா 104, ரிஷாப் பண்ட் 146 மற்றும் பும்ராஹ் 31 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு முதல் இன்னிங்ஸ்-ல் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்தியாவை போலவே தொடக்க ஆட்டம் சரியாக அமையாமல் போனது. அதுமட்டுமின்றி பார்ட்னெர்ஷிப் கிடைக்காமல் திணறி வருகிறது.

இருப்பினும் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 84 ரன்களை அடித்துள்ளனர். இதில் கேப்டனாக விளையாடும் பும்ரா எப்பையுமே இல்லாத அளவிற்கு பேட்டிங் செய்துள்ளார். ஆமாம், ஏதோ டி-20 போட்டி போலவே பேட்டிங் செய்த பும்ரா 16 பந்தில் 31 ரன்களை அடித்துள்ளார்.

அதில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் அதில் அடங்கும். அதுமட்டுமின்றி இங்கிலாந்து அணியின் முதல் மூன்று விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார் பும்ரா. போட்டி அளித்த பேட்டியில் பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் தோனி பற்றி சில முக்கியமான தகவல் பகிர்ந்துள்ளார் பும்ரா.

அதில் “ஒவ்வொரு போட்டியில் இருந்து நாங்கள் அனைவரும் தவறுகளை சரி செய்துகொண்டு முன்னேறிக்கொண்டு வருகிறோம். எனக்கு இன்னும் தோனியிடம் பேசிய விஷயங்கள் நியாபகத்தில் உள்ளது. அதில் அவர் (தோனி) கேப்டனாக பொறுப்பேற்று விளையாடுவதற்கு முன்பு ஒருமுறைகூட கேப்டனாக இருக்க வாய்ப்பே கிடைக்கவில்லை என்று என்னிடம் கூறினார் (பும்ரா).”

“அதனால் தான் இப்பொழுது அவர் (தோனி) ஒரு சிறந்த வெற்றிகரமான கேப்டனாக திகழ்கிறார். அதனால் நானும் எப்படி ஒருநிலையாக இருக்க வேண்டுமென்றும், அணியில் என்னால் என்ன உதவியை செய்ய வேண்டுமென்று தான் யோசிக்க போகிறேன்.”

” இந்திய அணியை வழிநடத்தி செல்வது மிகவும் பெருமையான விஷயம். அது எனக்கு இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பு என்னுடைய வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா..!”