தோனிக்கு பிறகு இவர் தான் CSK அணியை வழிநடத்த கூடிய திறமை உள்ளது ; இங்கிலாந்து வீரர் மொயின் அலி பேட்டி

0

பும்ரா தலைமையிலான இந்திய அணியும், பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டி யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு விளையாடி வருகின்றனர். ஆமாம், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு பார்ட்னெர்ஷிப் கிடைக்காமல் தொடர்ந்து விக்கெட்டை இழந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் ஆட்டம் அதிரடியாக இருந்ததால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

அனைவரும் 150 ரன்கள் தான் இந்திய அணி அடிக்கும் என்று பலர் நினைத்து கொண்டு இருந்த நேரத்தில் ஜடேஜா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரின் கூட்டு முயற்சியால் இந்திய கிரிக்கெட் அணிக்கு 416 ரன்கள் கிடைத்தது. பின்பு இப்பொழுது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகின்றனர்.

இதுவரை 27 ஓவர் விளையாடிய இங்கிலாந்து அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 84 ரன்களை அடித்துள்ளனர். இன்னும் 332 ரன்கள் வித்தியாசத்தில் உள்ளனர். என்ன செய்ய போகிறது இங்கிலாந்து அணி ?

இங்கிலாந்து அணியின் சுழல் பந்து வீச்சாளரான மொயின் அலி தீடிரென்று ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளை பற்றி பேசியுள்ளார். சென்னை அணியின் கேப்டன் பற்றியும், ஜடேஜாவை பற்றியும் பேசிய அவர் ; “ஆமாம் , ரவீந்திர ஜடேஜா கேப்டன் பதவிக்கு புதியது தான்.”

“அதுவும் ஐபிஎல் 2022யில் ஒரு அணியாக நாங்கள் யாரும் சரியாக விளையாடாமல் போனது அவருக்கு கேப்டன் பதவியில் இருக்க கடினமாக மாறியது. ஆனால் அவரால் நிச்சியமாக அணியை சிறப்பாகி வழிநடத்த முடியும், அவரிடம் 9ஜடேஜா) அந்த திறமை உள்ளது. வரும் காலங்களில் நிச்சியமாக இந்திய அணியை வழிநடத்துவார்”

“நான் ஜடேஜா மற்றும் தோனி இருவரும் கேப்டனாக இருக்கும் போது நான் விளையாடியுள்ளேன். இவங்க இவருக்கு இடையே பெரிய வித்தியாசம் ஒன்று இல்லை. ஆமாம், இருவரும் எப்பொழுதும் நேர்மையாகவும், அமைதியாகவும் விளையாடுவது வழக்கம் தான் என்று கூறியுள்ளார் மொயின் அலி.”

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து அணியின் சிறந்த சுழல் பந்து வீச்சாளர் மொயின் அலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது…!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here