ஐயோ ..! 16.5 கோடி விலை கொடுத்து கைப்பற்றிய வீரர் ஐபிஎல் 2023ல் விளையாடுவது சிரமம் தான் ; குழப்பத்தில் இருக்கும் மும்பை ;

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள். இது குறுகிய போட்டி என்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனால் இப்பொழுது ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல்.

2008ஆம் ஆண்டில் இருந்து இதுவரை கிட்டத்தட்ட 15 சீசன் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி , ஐபிஎல் 2023 போட்டிகள் இன்னும் நான்கு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏலம் கடந்த மாதம் 23ஆம் தேதி அன்று நடைபெற்று முடிந்துள்ளது.

அதில் ஆஸ்திரேலியா வீரரான கேமரூன் கிறீன்-ஐ 16.5கோடி விலை கொடுத்து கைப்பற்றியது மும்பை இந்தியன்ஸ் அணி. சமீப காலமாக ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரராக திகழும் கேமரூன்-ஐ கைப்பற்றியதால் மும்பை இந்தியன்ஸ் அணி பலம் கூடியது. ஏனென்றால், மும்பை அணியில் பும்ரா, கேமரூன் கிறீன், ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணி :

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பிரபலமான அணியாக திகழ்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி. இதுவரை ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 5 முறை அதிகபட்சமாக கோப்பையை வென்றுள்ளனர்.

அதுமட்டுமின்றி, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் , இஷான் கிஷான் போன்ற வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருப்பதால் மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான அணியாக திகழ்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் :

டிசம்பர் 23ஆம் அன்று நடைபெற்ற மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரரான கேமரூன் கிறீன்-ஐ 16.5 கோடி விலை கொடுத்து வாங்கியது மும்பை. தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் கேமரூன் கையில் அடிபட்டுவிட்டது. அதனால் அவரால் ஒரு சில போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் 2023 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடுவாரா இல்லையா என்று கேள்விகள் எழுந்து வருகிறது.

சமீபத்தில் வெளியான தகவலின் படி ஐபிஎல் 2023 முழுவதும் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ஏப்ரல் 13ஆம் தேதி வரை கேமரூன் கிறீன்- பவுலிங் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை காயம் சரியாகவில்லை என்றால் கேமரூன் கிறீன்-க்கு பதிலாக மாற்று வீரரை மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வு செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

வரும் ஏப்ரல் 2023ல் தொடங்க போகும் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் எந்த அணி வலுவாக இருக்கிறது ? எந்த அணி ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடரை கைப்பற்றும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள கமேண்ட்ஸ் பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!