கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமான ஆட்டத்தை விளையாடி ப்லே – ஆஃப் சுற்றுக்குள் நுழையாமல் வெளியேறியது. அதுவே முதல்முறை ஐபிஎல் வரலாற்றில் கோப்பை ப்லே – ஆஃப் வராமல் வெளியேறியது.
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆர்வலர்களும் சோகத்தில் மூழ்கினார்.அதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சரியான ஒரு அணி அமையவில்லை என்பதே உண்மை.
இந்த ஆண்டு 2021 ஐபிஎல் போட்டி வருகின்ற 8ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். அதுமட்டுமின்றி சிஎஸ்கே அணி நல்ல ஒரு அணியாக இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகளில் இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெல்ல சில வாய்ப்புகள் இருக்கின்றன.
சுரேஷ் ரெய்னா :
கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டுக்கு வந்த சுரேஷ் ரெய்னாவுக்கு ஒரு சில பிரச்சனை காரணமாக அவர் மீண்டும் இந்திய திரும்பினார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல ஒரு பேட்ஸ்மேன் கிடைக்கமால் போய்விட்டது. அதனால் பல போட்டிகளில் ரன்களை அடிக்க முடியாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் திணறினார்.
சுரேஷ் ரெய்னா நல்ல ஒரு பேட்ஸ்மேன் மட்டுமின்றி நல்ல ஒரு வீரர் என்பதே உண்மை. அதுவும் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டியில் சுரேஷ் ரெய்னா விளையாடுவதால் நிச்சயமாக சென்னை அணி நல்ல ஒரு பலம் இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
கேப்டன் தோனி :
கேப்டன் தோனி பல போட்டிகளில் பல சிக்கலான சூழ்நிலையை சந்தித்து வந்துள்ளார், அதனால் அவருக்கு ஒரு அணியை எப்படி வழிநடத்த முடியும் என்பது நல்ல தெறியும். அதுமட்டுமின்றி ஐபிஎல் ஆரம்பகாலத்தில் இருந்து இப்பொழுது வரை சென்னை அணிக்கு தோனி தான் கேப்டன்.
இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி மகேந்திர சிங் தோனி அவரது ஓய்வை பற்றி கடந்த ஆண்டு அறிவிச்சுள்ளர், இதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது மிகவும் ஒரு பெரிய அதிர்ச்சியாக தான் இன்னும் இருக்கிறது.
அதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் இன்னும் நல்ல செலுத்தி விளையட முடியும் என்று ரசிகர்கள் நம்பி வருகின்றன.கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போல் இல்லாமல் இந்த ஆண்டு தோனி நிச்சயம் ஏதாவது செய்வார் என்று நம்பப்படுகிறது.
சூழல் பந்து வீச்சாளர் மற்றும் ஆல்ரவுண்டர்கள் :
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் புதிதாக மொயீன் அலி மற்றும் கிருஷ்ணப்ப கவுதம் ஆகிய இருவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு சிறப்பான ஆல்-ரவுண்டர் பட்டியலில் அமைவார்கள். அதுமட்டுமின்றி ஹர்பாஜன் சிங் அணியில் இருந்து வெளியேறித்தால் அவனுக்கு பதிலாக கிருஷ்ணப்ப கவுதம் இடம் பெற்றுள்ளார். அதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நல்ல ஒரு சூழல் பந்து வீச்சராக அமைவார் என்று நம்பப்படுகிறது.