தென்னாபிரிக்கா வீரர் லுங்கி நிகிடி இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அதுமட்டுமின்றி, சென்னை சூப்பர் கிங்ஸ் 2018 கோப்பை வென்றதுக்கு இவரும் ஒரு முக்கியமான காரணம் என்றே சொல்லலாம்.
கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் சாம் குரானுக்கு பதிலாக இவர் விளையாடினார். ஆனால் வெறும் 3 போட்டிகளால் மட்டுமே 2020 ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடினார். சமீபத்தில் ஒரு பிரபலமான தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த லுங்கி நிகிடி டோனியை பற்றி கருத்தை கூறியுள்ளார்.
நங்கள் சென்னை வரும்போது எல்லாம் , மக்கள் அனைவரும் தோனி தோனி என்ற குரலில் அழைப்பார்கள். அதுமட்டுமின்றி அதனை கேக்கும்போது அனைவரும் உடம்பு முழுவதும் ஒரு நெகிழ்ச்சி ஏற்படும். கிரிக்கெட் விளையாட்டில் மட்டும் அவர் ஒரு பெரிய வீரர் இல்லை சென்னைக்கும் அவர் அப்படித்தான் என்று கூறியுள்ளார் லுங்கி நிகிடி.
அதுமட்டுமின்றி டோனி மிகவும் கூல் ஆனா மனிதன் என்றும் அவரது பக்குவம் மற்றும் அவர் எதிர்க்கும் அதிகமாக உணர்ச்சிகளை காமிக்கமாட்டார். அவரை அவரே தான் இந்த அளவுக்கு கொண்டு சென்றுள்ளார், அவரது கேப்டன் பொறுப்புதான் எனக்கு இன்னும் அர்ச்சரியத்தை அளிக்கிறது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவது எனக்கு மிகவும் சந்தோசத்தை அளிக்கிறது என்றும் கூறியுள்ளார் லுங்கி நிகிடி.
இந்த ஆண்டு ஐபிஎல் 2021, ஏப்ரல் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் லுங்கி நிகிடியால் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாது. ஏனென்றால் அவருக்கு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டி-20 போட்டிகளில் விளையாட உள்ளார். அதனால் அவரால் சில போட்டிகளில் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகியுள்ளது.