இன்று விளையாடும் சென்னை அணிகள் இவர்கள் தான்….! பதினோறு பெயர் கொண்ட பட்டியல் வெளியானது….

0

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஏனென்றால் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் 10 புள்ளிகளில் எடுத்த நிலையில் புள்ளிபடியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே – ஆஃப் குள் வராமல் வெளியேறுவது. இதனால் சென்னை சூப்பர் வீரர்கள் மிகவும் வேதனையுடன் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரே போட்டிதான் இருக்கிறது அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் இந்தியாவுக்கு நாடு திரும்ப உள்ளனர்.

49வது போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர் கொண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் … இறுதி வரை போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில்வெற்றியை கைப்பற்றியது. அதனால் புள்ளிபடியலில் 10 புள்ளிகளை பெற்று 8 வது இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.

53வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் ராகுல் தலைமையிலான கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி துபாயில் உள்ள அபு தபி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டியில் இதுவே சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு இறுதி போட்டியாகும்.

ஒப்பெனிங் பேட்ஸ்மேன்:

கடந்த இரு போட்டிகளில் ருடுராஜ் நல்ல ஒரு தொடக்க வீரராக அரை சதம் அடித்து நிருபித்துள்ளார். அதுமட்டுமின்றி வரும் போட்டிகளில் நல்ல தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்க படுகின்றது. அவருடன் இணைத்து வாட்சன் அல்லது டுபிளேஸ்ஸ் களம் இறங்குவர் என்று எதிர் பார்க்க படுகிறது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்:

அம்பதி ராயுடு , எம்.எஸ்.தோனி , ஜெகதீசன் ஆகிய மூவரும் மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வார்கள் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏனென்றால் ரெய்னா இடத்தை ராயுடு சரியாக பயன்படுத்தி 3வது இடத்தில் பேட்டிங் செய்து வருகிறார். அதுமட்டுமின்றி சரியான நேரத்தில் ரன்களையும் எடுத்துள்ளார்.அதன்பிறகு தோனி இறங்குவார் என்று எதிர்பார்க்க படுகிறது.

ஆல் – ரவுண்டர் :

சாம் குரான் மற்றும் ஜடேஜா சிறந்த ஆல் – ரவுண்டர் என்று நிருபித்துள்ளார். இதுவரை சென்னை வாங்கிய 5 வெற்றிகளும் இவர்கள் தான் முக்கிய காரணமாக இருக்கும் என்பதில் மாற்றுகருத்து இல்லை என்றே சொல்லலாம். அதனால் இவர்களை அணியில் இருந்து வெளியேற்ற வாய்ப்பு மிக மிக குறைவு என்றே சொல்லலாம்.

பௌலிங்;

தீபக் சகார் மற்றும் கரன் சர்மா இதுவரை விளையாடிய போட்டிகளில் முக்கியமான நேரத்தில் முக்கியமான விக்கெட்களை எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. லுங்கி நிகிடி மற்றும் சண்ட்னர் பதிலாக இம்ரான் தாகிர் மற்றும் வேறொரு பேட்ஸ்மேன் அதாவது டுப்லேசிஸ் எதிர்பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here