இந்த ஆண்டு ஐபிஎல் 2020 சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு சாதகமாக அமையவில்லை. ஏனென்றால் இதுவரை விளையாடிய 13 போட்டிகளில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதனால் 10 புள்ளிகளில் எடுத்த நிலையில் புள்ளிபடியலில் இறுதி இடத்தில் உள்ளது சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி.
ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல் முறை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ப்ளே – ஆஃப் குள் வராமல் வெளியேறுவது. இதனால் சென்னை சூப்பர் வீரர்கள் மிகவும் வேதனையுடன் மீதமுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இன்னும் ஒரே போட்டிதான் இருக்கிறது அதன்பிறகு சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் இந்தியாவுக்கு நாடு திரும்ப உள்ளனர்.
தோனியின் உருக்கமான வார்த்தைகள் :
நாங்கள் தோற்றாலும் ஜெயித்தாலும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் ரசிகர்கள் மிகவும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி நாங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அடுத்த ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்று ரசிகர்ளுக்கு நல்ல ஒரு செய்தியை கூறியுள்ளார்.
தோனி கொடுத்த பேட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் ….. மகிழ்ச்சி… அப்படி என்ன சொன்னார் ??? தெரியுமா…!!!
ஐபிஎல் 2020 லீக் போட்டியில் இறுதியாக பஞ்சாப் அணிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. நிர்ணையக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தது பஞ்சாப்.
154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலகுடன் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 பந்துகள் மீதமுள்ள 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அதன்பின்னர் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி::: இது எங்களுக்கு இந்த ஆண்டு ஐபிஎல் 2020யின் இறுதி போட்டி. மிகவும் வேதனையாக தான் உள்ளது. ஆனால் கண்டிப்பாக நாங்கள் அடுத்த ஆண்டு மீண்டு வருவோம் நல்ல ஒரு கம் பேக் கொடுப்போம். அதுமட்டுமின்றி ரசிகர்கள் எங்களுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள் அதனால் அவர்களின் ஆசையை அடுத்த ஆண்டு நிறைவேற்றுவோம்.
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி எங்களுக்கு நல்ல ஒரு பாடமாக இருக்கும். எங்களுடைய மிகப்பெரிய பக்கபலத்தை நாங்கள் புரிந்து கொண்டோம். அதுமட்டுமின்றி ப்லே – ஆஃப் இந்த முறை மிகவும் கிட்டத்தில் தவரவிட்டோம். அதுமிகவும் வேதனையை தருகிறது என்று தோனி கூறியுள்ளார்.