குஜராத் அணிக்கு பதிலடி கொடுக்கக் காத்திருக்கும் சென்னை அணி…. அசுர பலத்துடன் களமிறங்க போகும் அணி இதுதான் !

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், இன்று (மார்ச் 31) மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இந்த விழாவில், ஐ.பி.எல். நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கவுள்ள 10 அணிகளின் கேப்டன்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொள்ள உள்ளனர்.

இன்று (மார்ச் 31) இரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை, நரேந்திர மைதானத்தில் எதிர்கொள்கிறது.

கடந்த ஐ.பி.எல். தொடரில், அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010, 2011, 2018, 2021 என நான்கு முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதேபோல், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், அதிகமுறை பிளே ஆஃப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழு பலத்துடன், நடப்பு ஐ.பி.எல். தொடரில் களமிறங்குகிறது. அணியின் தொடக்க பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே ஆகியோர் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி ஆகிய வீரர்களும் களமிறங்கவுள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், அணிக்கு திரும்பி இருப்பது வலு சேர்த்துள்ளது. எனினும், பென் ஸ்டோக்ஸ் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, பேட்டிங் மட்டுமே செய்வார் என பயிற்சியாளர் அறிவித்துள்ளார். இது சென்னை அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின், 7 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் சென்னை அணிக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால், சென்னை அணி இந்த மைதானத்தில் அதிகமுறை பயிற்சி மேற்கொண்டிருப்பதும், அதிகமுறை விளையாடி இருப்பதும் பிளஸ் ஆகப் பார்க்கப்படுகிறது.

முதல் போட்டிக்கான உத்தேச சென்னை அணியின் விவரம் :

டேவன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, மகேந்திர சிங் டோனி, ரவீந்திர ஜடேஜா, தீபக் சஹார், பிரிட்டோரியஸ், பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங்.

இன்றைய முதல் போட்டியில் சென்னை அணி வெற்றியை கைப்பற்றுமா ?? உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள் கிரிக்கெட் ரசிகர்களே..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here